துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை இணைந்து 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு மற்றும் திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ரமலான் 7 ( 27 ஆகஸ்ட் 2009 ) வியாழன் மாலை தராவிஹ் தொழுகையைத் தொடர்ந்து துபாய் சிறிய ஜர்வூனி ( கோட்டை ) பள்ளியில் நடைபெற இருக்கிறது.
துபாய் செம்பி இன்டர்நேஷனல் குரூப்பின் கே.எஸ்.எம். முஹம்மது யாசின் தலைமை வகிக்கிறார். சங்கீதா உணவக பங்குதாரர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் வரவேற்புரி நிகழ்த்துகிறார்.
200 வார தஃப்ஸீர் டிவிடியினை ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இயக்குநர் பி.எஸ்.ஏ. ஆரிஃப் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியினை ஈடிஏ அஸ்கான் இயக்குநர் செய்யது எம். ஹமீது ஸலாஹுத்தீன் பெற்றுக்கொள்கிறார்.
வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அரேபியா டாக்ஸி இயக்குநர் பி.எஸ்.எம். ஹபீபுல்லாஹ், பாபநாசம் ஆர்.டி.பி. கல்லூரி அரபித்துறை பேராசிரியர் கவிஞர் எம். ஷரபுத்தீன் ஆலிம் மிஸ்பாஹி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மவ்லவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி, ஆவூர் தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் மன்பயீ உள்ளிட்டோ ஏற்புரை நிகழ்த்துகின்றனர்.
தேரிழந்தூர் தாஜுத்தீன், அடமங்குடி அப்துல் ரஹ்மான் ஆகியோர் இஸ்லாமிய கீதம் பாடுவர். வின்னர் குரூப் நிர்வாக இயக்குநர் டி.ஏ. அப்துல் கபூர் காகா நன்றியுரை நிகழ்த்துகிறார்.
மேலும் விபரங்களுக்கு : 050 - 4255 256
மின்னஞ்சல் : ahmed muhammad mahroof mahroof1958@yahoo.com
திருக்குர்ஆன் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குர்ஆன் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Labels: திருக்குர்ஆன் மாநாடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)