கல்வி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஓன்னுதா….ன்…. ஆனா ரெண்டு

அய்மான் கல்லூரியின் அதிரடி கல்வித்திட்டம் ‘ஒன்னுதான் வாங்கப் போனேன் .. ஆனால் ரெண்டு கிடைத்தது..’ என்று ஒருவர் சொன்னால் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம்.

இது போன்ற வாய்ப்பைத்தருவது திருச்சியில் அமைந்திருக்கும் ‘அய்மான் பெண்கள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’. ஒரு டிகிரி வாங்குவதற்காக சேரும் மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்தின்படி அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவுக்கான பாடத்திலும் பயிற்சி அளிக்கப்பட்டு “முபல்லிகா’ பட்டம் கொடுக்கப்படுகிறது. மாலைநேர வகுப்புகளாக நடத்தப்படும் இப்பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவிகளுக்கு இஸ்லாமிய மார்க்க விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவி ஒரு முழுமையான மார்க்க அறிஞராகவும் பல்கலைக்கழக பட்டம் பெற்ற பட்டதாரியாகவும் இரு பட்டங்கள் பெற்று வெளிவரலாம். ஓவ்வொருவருடமும் அய்மான் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தேர்வில் தரப்பட்டியலில் சிறந்த இடத்தில் இடம் பெற்று வருகிறது.
சென்ற ஆண்டு தேர்வில் பல்கலைக்கழகத்தில் 1,2,3,4, மற்றும் 5 என முதல் ஐந்து இடங்களை பிடித்து வெற்றிவாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. B.Sc. ( Nutrition & Dietics ) பிரிவில் இவ்விடத்தைப் பிடித்திருக்கும் இக்கல்லூரி பி.காம் ((B.Com.) .) கம்ப்யுட்டர் சயன்ஸ் ( B.Sc.,Computer Science)போன்ற பாடப்பிரிவுகளிலும் பல்கலைக்கழகத்தின் தரப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்தே பல்கலைத் தரப்பட்டியலில் சிறப்பான இடம்பெற்றுவருகிறது.
மாணவிகளின் கல்வித்தரம் உயர்வரதற்காக, பாடத்திட்டம் மட்டுமல்லாமல் பொதுவான கருத்துச் செறிவுள்ள சிறப்பு வகுப்புகளையும் அவ்வப்போது தனித்தன்மை வாய்ந்தவர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. ‘தலைமைப்பண்பு’, “பட்ஜெட்” இஸ்லாத்தில் மகளிர் கல்வி:” போன்றதலைப்புகளில் பல்வேறு வகையான செமினார்கள் நடத்தப்படுகிறது.
மாணவிகளின் சுய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கல்லூரி நாட்களிலேயே டைப்ரைட்டிங், டைலரிங், கைவினைப் பொருட்கள செய்முறை மற்றும் DTP உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது,
மேலும் கல்லூரி முதல்வர் ரஜப் பாத்திமா கூறும்போது, ‘மாணவிகளுக்கு நல்லொழுக்கம், மார்க்கப் பற்று, நிர்வாகத்திறன் உள்ளிட்ட அனைத்துவகை பண்புகளையும் கற்றுத்தருகிறோம். பெற்றோர்களும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்களானால், அய்மான் மாணவிகளை தரமிக்கவர்களாக உண்டாக்க முடீயும், ‘என்றார். அய்மான் கல்லூரியில் நிர்வாகி பேராசிரியர் உமர் பாஷா அவர்கள் கூறும்போது, “புதியதாக ஆடிட்டோரியம் கட்டப்பட்டுவருகிறது. இன்டர் காலேஜ்’ போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அய்மானில் நடப்பதற்கு ஆயத்த வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்பட்சத்தில் மாணவிகளின் தனித்திறன் சிற்ப்படைய வாய்ப்பு ஏற்படும். பிற கல்லூரி மாணவிகளைவிட அய்மான் கல்லூரி மாணவிகள் நிர்வாகத்திறனில் மேலோங்கி இருக்கிறார்கள்.’ என்றார். பேட்டியின் போது அய்மான் கல்லூரியின் துணைத்தலைவர் அப்துல் வஹாப் சாஹிப் உடனிருந்தார்
தகவல்: முதுவை. ஹிதாயத்.

நமதூர் +2 முடித்த மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு

திருவாரூர் மத்திய பல்கலை செப்.,ல் திறப்பு துணைவேந்தர் அறிவிப்பு
திருவாரூர்: ""திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் திறக்கப்படும்,'' என துணைவேந்தர் சஞ்சை கூறினார்.
திருவாரூரில் மத்திய பல்கலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதற்கட்டமாக செயல்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு பகுதியை தற்காலிகமாக பெற்று மத்திய பல்கலை செயல்படுத்த பணிகள் துவங்கினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள அலுவலகங்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்டிடத்தின் சாவிகளை கலெக்டர் சந்திரசேகரன், மத்திய பல்கலை துணைவேந்தர் சஞ்சையிடம் ஒப்படைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணை வேந்தர் சஞ்சை கூறியதாவது: தேசிய அளவில் 12 இடங்களில் மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்படுகிறது. அவை அனைத்தும் முற்றிலும் கிராமப்பகுதியில் செயல்படுகிறது. கிராம முன்னேற்றம், ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய பல்கலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருவாரூரில் மத்திய பல்கலை பணிகள் துவங்க ஏதுவாக முதற்கட்டமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவிர, திருவாரூர் அடுத்த வண்டாம்பாளை அடுத்த நிலக்குடி கிராமத்தில் பல்கலை பெரிய அளவில் அமைப்பதற்காக 528 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு முறையாக பல்கலை அமைக்கப்படும். முன்னதாக செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் இப்பல்கலை துவக்க விழா நடக்கும். அதில், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தேதியும், பங்கேற்போர் விபரமும் பின்னர் அறிவிக்கப்படும்.
ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். முதற்கட்டமாக நான்கு பாடப்பிரிவுகளில் எட்டு வகுப்பு துவங்கும். ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 30 மாணவ, மாணவிகள் இருப்பார்கள். இங்கு இளங்கலை, முதுகலை, பி.எச்டி., வரையிலான அனைத்து கல்வியையும் பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்படும். பெண்களுக்கு தனியாக விடுதி அமைத்துக் கொடுக்கப்படும். உலகத்தரத்துடன் இணைய தள இணைப்பு, இ.லைப்ரரி வசதி கொண்ட நூலகம் அமைக்கப்படும். முழுமையான பல்கலையாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர் 08.08.2009

ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பு

மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சிப் படிப்புகட்டுமானப் பொறியியல் மையத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய 2 வருட ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பு தொடங்கப்படுகிறது. இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் நாகேஷ், ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமமோகன் ராவ், கே.ஆர்.ஸ்ரீதரன் ஆகியோர் கூறியதாவது: கட்டுமான ஆராய்ச்சி மையம், பெங்களூரு வான்வெளி ஆய்வகம் .....
மேலும் படிக்க>>> நன்றி: http://valuthoor.blogspot.com/

சீன தேசம் சென்றேனும் சீர் கல்வி பெற்றிடுக! -- நபிமொழி











நன்றி : அஸ்ரப் அலி