முக்கிய செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முக்கிய செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதியபள்ளி அடிக்கல் நாட்டுவிழா


நமதூர் கூத்தாநல்லூர் சகோதரர்கள் அனைவருக்கும் அன்பான
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)......
அல்லாஹ்வின் பேரருளால் நமதூரை சார்ந்துள்ள லக்ஷ்மாங்குடியில்,
ஜன்னத் நகர், ஆயிஷா நகர், உமர் ஒலி நகர், ஷா ஆலம் நகர், மற்றும்
காமராஜர் காலனியில் வசிக்கும் முஸ்லிம்கள் தொழுவதற்காக,
நமதூரை சேர்ந்த ஹாஜி சங்கந்தியார் அகமது மைதீன் அண்ணன்
ஒரு பள்ளிவாசலை தனது சொந்த செலவில் கட்டி வக்பு செய்ய
உள்ளார்கள். புதிய பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா ஹிஜ்ரி 1432
ஜமா அத்துல் பிறை 2 (07.04.2011) அன்று நடந்தது.
பள்ளியின் கட்டுமானப்பணியை சூபி ஹைடெக் பில்டர்ஸ் நிறுவனம்
ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

thagaval:  shaik ibrahim 






(N R I) மக்களே,  திட்டமிடுங்கள்! இது மனதிற்கு கஷ்டம் தருகின்ற விஷயம் என்றாலும் அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம், ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா? பதில் இல்லை என்பதுதான்
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், துபாய் பத்திரிகையான கல்ஃப் நியூஸ்  பத்திரிகையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.
அந்த தினசரியில் வந்த கட்டுரை சொன்னது என்னவென்றால் ( U.A.E) துபாய் போன்ற நாடுகளில் இறப்பின் விலை மதிப்பு .மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.
அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் துபாயில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எந்த அளவு பண செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள் . அதை படிக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இருக்கமான உணர்வு தோன்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை.


கடந்த ஆண்டு பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்றும் அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.

வேலையில் இருக்கும் குடும்ப தலைவர் ஒருவர் இங்கே இறக்க நேரிட்டால், துபாயில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் கொடுத்த பின்னர்தான் இறந்தவரின் உடலை எடுத்து போக அனுமத்திப்பார்கள் என்பது, கேட்கும் போது கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்பது மனதை சுடும் நிஜம்தான். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் மற்றும். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்கவும் தாமதமாகும்.


இழப்பின் துயரத்துக்கு மத்தியில் ,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பங்களுக்கு.


ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் ( மக்கா அளவோடு சாப்பிட்டு உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ளுங்கள்)

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!


எந்த வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரை எதற்காக எவ்வளவு பணம் மற்று சொத்துக்களை சேர்த்துவைத்திருந்தாலும், இதை படித்த பிறகாது இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்று முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைக்க வேண்டும் ஆனால், அது மற்றவர்களின் பெயரில் இருப்பது மிகவும் முக்கியம்.    
இதுதொடர்பான கருத்துக்களை

கல்ஃப் ந்யூஸில் படிக்க இங்கே க்ளிக் செய்து பாருங்க...

இறப்பு செலவு பட விளக்கத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

thanks  :  P.M.T. IBRAHIM.

seithikal

                          தமிழக அரசு  அறிவிப்பு

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்காக நல நிதி

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்காக நல நிதி
துபாய், சவூதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் அங்கு திடீரென்று ஏற்படும் இன்னல்களை சமாளிக்க மத்திய அரசு இந்தியர்கள் நலநிதியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேடு, சவூதி அரேபியா, கத்தார், மலேசியா, ஏமன், சூடான், சிரியா, இந்தோனேசியா, லெபனான், தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் இந்த நாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எதிர்பாராதவிதமாக பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.போலி விசா காரணமாக வெளிநாடுகளில் தவிப்பது, தங்களது நிர்வாகத்திடம் இருந்து உரிய சம்பளம் கிடைக்காமல் அல்லல்படுவது, வீட்டு வேலையின் கொடுமை காரணமாக ஓடிவிடுவது, தங்குமிடம் மற்றும் தரமான மருத்துவ வசதி கிடைக்காமல் இருப்பது, வேலை பிடிக்காமல் சொந்த ஊருக்கும் திரும்பி வரமுடியாமை, பணியின் போது இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வர கம்பெனிகள் ஓத்துழைப்பு அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் உதவிக்காக கையேந்தி நிற்கும் நிலை உள்ளது.இவ்வாறு தவிப்பவர்களை மீட்க இந்திய அரசு தனி நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதை தொடர்ந்து மத்திய அரசு இந்தியர்கள் நலநிதி என்ற பெயரில் நிதியை உருவாக்கியுள்ளது.
இதற்கு முதல் கட்டமாக ரூ.4 கோடியே 80 லட்சத்தை மத்திய அரசு ஓதுக்கீடு செய்துள்ளது.அத்துடன் பல்வேறு வழிகளில் நன்கொடை பெற்று நிதியை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
16 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் இதற்காக தனி மிஷன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மிஷன் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.இதனால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் நிம்மதியடைந்துள்ளனர்.
நன்றி : தட்ஸ் தமிழ் , தமிழ் முஸ்லீம் அரசியல் மேடை

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தேர்வு

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நன்றி: தினத்தந்தி சென்னை பதிப்பு 11.06.2009

குர் ஆன் சமஸ்கிருத மொழி பெயர்ப்பு

உலகப் பொதுமறை திருக்குர் ஆன் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.
பழமையான பாரசீகம், கிரேக்கம், ரோமன், லத்தீன் போன்ற மொழிகளிலிருந்து கடந்த ஆண்டு நேபாள மொழியிலும் அருள்மறை குர் ஆன் மொழி பெயர்க்கப் பட்டது. உலகில் வாழும் மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகளிலும் சத்தியத் திருமறையாம் திருக்குர் ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களின் இதயங்களை சுத்திகரிக்கிறது .தற்போது இந்தியாவின் மிகப் பழமையான மொழிகளில் முக்கியம் இடம் வகிக்கும் வடமொழி என்று வர்ணிக்கப்படும் சமஸ்கிருத மொழியிலும் திருக்குர் ஆன் மொழி பெயர்க்கப்பட இருக்கிறது. ஹிந்து மதத்தின் வேத மொழியாகக் கருதப்படும் சமஸ்கிருதத்தில் திருக்குர் ஆன் மொழி பெயர்ப்பு செய்யப்படுவது சமயங்களுக்கிடையே நன்னம்பிக்கை வளர்க்கும் முயற்சியாகும்.இந்த அரிய செயலை நிகழ்ச்சி புகழ் பெறவிருப்பவர் ரஜியா சுல்தானா என்ற 21 வயது இளம்பெண் இவர் பேராசிரியர் முஹம்மது சுலைமானின் பேத்தி் பேராசிரியர் முஹம்மது சுலைமான், திருக்குர் ஆனை ஹிந்தி மொழிக்கு மொழியாக்கம் செய்தவர் ரஜியா சுல்தானா சமஸ்கிருத மொழியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். டி.என்.ஐ.

நன்றி : சங்கமம்.

வேண்டுகோள்


சிந்தித்து செயல்படுங்கள்




நன்றி சமநிலை சமுதாயம்.

பெரிய பள்ளிவாசல் நிர்வாக தேர்தல்

  • கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக தேர்தல், வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும்.
  • தங்கள் பெயர் விடுபட்டியிருந்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் சேர்ப்பு மனு படிவத்தில் ஐந்து நாட்கள் கெடுவிற்குள் (ஊர் உறவின் முறை ஜமாத்தார்கள்) மட்டும் மீண்டும் விண்ணபிக்கவும்.
மேலும் விபரங்களுக்கு (www.koothanallur.co.in
) இணைத்தளத்தில் பார்க்கவும்.

உங்களது ‌ ‌பெயர் மற்றும் விவரங்க‌‌ளை வக்பு வாரியத்தினால்வெளியிடப்பட்ட கீழ்கண்ட வாக்காளர் பட்டியலில் (PDF File) உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள் PDF தரைறக்கம் செய்ய இங்கேசொடுக்கவும்

Thanks to riya.

மறுமை வாழ்வுக்கு துவா செய்வோமாக

நமது KEO வின் பொருளாளர் P.M.A முஹம்மது இப்ராஹிம் அவர்களின் தாயார் அல்லாஹுவிடம் சேர்ந்து விட்டார்கள் அன்னாரது ஹக்கில் துவா செய்கிறோம் .

KEO MEMBERS, U.A.E

நமதூர் அன்வரியாப்பள்ளி நிர்வாகத்தேர்தல்


KEO வின் நிர்வாகக் கூட்ட அழைப்பு


மறுமை வாழ்வுக்கு துஆ செய்வோம்

நமது KEO வின் பொருளாள்ர் P.M.A. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் தகப்பனார் அல்லாஹ்விடம் சேர்ந்து விட்டார்கள் அன்னாரது ஹக்கில் துவா செய்வோமாக

KEO MEMBERS -- U.A.E.

தகவல்:
முஹம்மது நியாஜ்,
மலேசியா.

விபத்து நடந்த இடத்தின் புகைப்படங்கள்

அண்மையில் நடந்த வாகன விபத்தில் சாதிக் பாட்சா அவர்கள் பலியான இடத்தின் படங்களை தான் இங்கே பதிக்கப்பட்டுள்ளது நெஞ்சை உலுக்கிய அந்த கோர சம்பவம் நடந்த இடங்களை ஜனாப் கிளாசிக் அன்சாரி அவர்கள் படம் பிடித்து சமர்பித்துளார்கள் அல்லாஹ்விடத்தில் சாதிக் பாட்சாவிர்க்காக துஆ செய்யுங்கள்.


Classic Ansari
email: ansaariclassic@yahoo.com
055/3799109 050/4366727




விபத்து நடந்த இடம்.



இந்த தொலைபேசி கம்பத்தில் தான் வாகனம் மோதியது.



பயணம்
செய்த வாகனம்





தினத்தந்தி செய்தியில் நடந்த விபத்து பற்றி




பயணம் செய்யும் பொது விழிப்புணர்வோடு இருங்கள்

சில்மிஷ கண்டக்டருக்கு செருப்படி கொடுத்த மாணவி


கடலூர் : அரசு ஏர் பஸ்சி்ல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டருக்கு மாணவி ஒருவர் செருப்படி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கண்டக்டருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ரபீக். புதுச்சேரியில் கடை நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன், காயல்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு, பக்கத்து வீட்டு முதியவர்களுடன் ரபீக் தனது மகள் நூர்ஜகானை(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருச்செங்கோட்டிலிருந்து புதுச்சேரி செல்லும் அரசு சொகுசு பஸ்சில் அனுப்பி வைத்தார். நூர்ஜகான், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

பஸ் தொழுதூர் அருகே வந்தபோது, திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் முருகேசன் (34), கண்டக்டரான செஞ்சியை சேர்ந்த ராஜாவிடம், பஸ்சை ஓட்டும்படி கூறி விட்டு, கண்டக்டர் பணியில் ஈடுபட்டார். நூர்ஜகான் அருகே அமர்ந்த முருகேசன், தூங்கி கொண்டிருந்த அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த நூர்ஜகான், புதுச்சேரியில் உள்ள உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மொபைல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடனே, அவர்கள் கார் மூலம் கடலூருக்கு வந்தனர். நேற்று காலை பஸ் கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்ததும், நூர்ஜகான் முருகேசனை செருப்பால் அடித்தார். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் முருகேசனுக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். முருகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் பஸ்சில் சில்மிஷம் செய்த கண்டக்டருக்கு மாணவி ஒருவர் செருப்படி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர்

சொட்டு மருந்து கொடுத்த குழந்தைகள் மயக்கம்

கோவை: போலியோ சொட்டு மருந்து குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அரசு மருத்துவமனைகள்,அரசு சுகாதார மையங்கள் ரயில் நிலையங்கள்,பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது. முகாமை சென்னை கோபாலபுரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை துவக்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.


போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக ஏற்பட்ட புரளியால் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புரளியால் பீதியடைந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல துவங்கினர். இதனால் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் அருகே உள்ள பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை; இவரது மகன் சங்கரன்(4). சங்கரனுக்கு இதயக்கோளாறு காரணமாக ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் சங்கரனுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சங்கரன் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் போலியோ சொட்டு மருந்து முகாம்களை முற்றுகையிட்டனர்.இது தொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவமனையையும் பொதுமக்கள் தாக்கி உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இந்த புரளி காரணமாக கோவை கலேக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ‌செய்தியாளர்கள் சந்திப்பில் கலெக்டர் கூறியதாவது: பொதுமக்கள் இந்த புரளியை நம்ப வேண்டாம்; இந்த புரளி பரப்பப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை; அவர்கள் யார் என கண்டுபிடித்து,புரளியை பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் மயக்கம் அடைந்திருப்பதாக ஏற்பட்ட புரளியை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர்

இன்று 21/12/2008 போலியோ சொட்டு மருந்து

போலியோ நோய் தடுப்புக்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறுகிறது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மறவாமல் நாளை காலையிலேயே முதல் வேலையாக அருகில் உள்ள முகாமுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
போலியோ நோய் தடுப்புக்காக நாடு தழுவிய அளவில் 14வது ஆண்டாக நடத்தப்படும் இந்த சிறப்பு முகாமின் முதல் கட்டம் நாளை நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள், பொது சுகாதார மையங்கள் மட்டுமின்றி மக்கள் அதிக அளவில் கூடும் ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சத்துணவு மையங்கள் என பல்வேறு இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாமும் பங்கேற்க, தவறாமல் குழந்தைகளுக்கு நாளை முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து கொடுப்போம்.

நன்றி நிகழ்வுகள்.காம்

மக்களுக்கு தெரிவியுங்கள்.

விண்ணப்ப படிவம் கொடுத்து விட்டீர்களா

கூத்தநல்லூர் ஜமாத்தார்களே விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டீர்களா U.A.E. யில் இன்று கடைசி நாள்.