அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இந்த இணைய தளத்திற்கு www.keoonline.co.cc முகவரி மூலமும் பார்வையிடலாம்.
இந்த வலைப்பூ பற்றிய கருத்துக்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிக்கலாம் உங்கள் கருத்து கேட்டு இன்னும் நம்மை மேம்படுத்தி கொள்வதற்கு உதவும்.
எங்கள் மின்னஞ்சல் முகவரி keoorganisation@gmail.com
மதுக்கூர் இந்திரா நகர் 5 ம் தெரு. 06.11.2009
Posted by Koothanallur Emirates Organisation at 11:06 PMLabels: மௌத்து செய்திகள்
திலிப் குமாராக இருந்த ஓர் இளைஞன் இஸ்லாத்தை தழுவி ஏ.ஆர். ரஹ்மானாக மாறி உலக புகழ் பெற்றது குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தும் மனம் திறந்து அளித்த பேட்டி
இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.
1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.
அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.
முட்டுக்கட்டை
எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை போட்டார்கள்.
அப்போது என் மனம் உடைந்து போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள். சுங்க இலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக நடத்தினாங்க.
அந்த நேரத்தில் தினம் விமான நிலையத்துக்கும் வீட்டுக்கு மாக அலைந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி தவித்தேன். நல்லவேளை எங்க அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.
அத்தனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு இசை சாதனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம். இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால் எவரால் தடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.
சொன்னது பலித்தது
மகன் இரவில் தூங்காமல் இசைக் கருவிகளைக் கொண்டு பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா கஸ்தூரி – கோவில், தேவாலயம், மஸ்ஜித் என்று சென்று தன் மகனுக் காகவும், குடும்பத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத நிலையில் ஒருநாள் கரீமுல்லாஹ் ஷா காதிரி என்ற ’சூபி’ பெரியவரை கஸ்தூரி குடும்பம் சந்திக்க நேர்ந்தது.
இன்னும் 10 ஆண்டுகளில் திலீப் என்னைத் தேடி வருவான் என்று அந்தப் பெரியவர் கூறிச் சென்றார். அவர் சொன்னது போல் நடந்தது.
ரகுமானுக்கு 21 வயதான போது 1987-ல் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் கிடைத்தன. இதற்கு அடிப்படை ‘சூபி’ பெரியவரின் அறிவுரை அதுவே ரகுமானை யும், அவரது தாயாரையும் இஸ்லாத்தை தழுவ வைத்தது. அவருடைய இளைய சகோதரிகளும் இஸ்லாத்தில் இணைந்தனர். மூத்த சகோதரி காஞ்சனா மட்டும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்தார்.
1989-ல் ‘சூபி’ கரீமுல்லாஹ் ஷா அடிக்கல் நாட்ட ரகுமானின் ரெக்கார்டிங் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது.
இஸ்லாம் அனுபவம்
இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வைப் பற்றி ரகுமான் நினைவு கூர்கிறார்.
அது ஒரு கனவில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் அப்போது மலேசியாவில் இருந்தேன். ஒரு பெரியவர் என் கனவில் வந்து இஸ்லாத்தில் இணைந்து விடு என்று கட்டளை யிட்டார். இது பற்றி ஆரம்பத்தில் நான் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி எனக்கு அந்த கனவு வந்தது.
ஒருநாள் என் அம்மாவிடம் இது பற்றிப் பேசினேன். இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொள் என்று எனது தாயாரும் எனக்கு ஊக்கம் அளித்தார். ஒரே இரவில் நான் இஸ்லாத்தைத் தழுவவில்லை. ‘சூபி’ தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாத்தின் ஆணிவேர் வரை சென்றிருந்தேன். இதற்காக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் அரபி மொழி கற்றேன்.
1988-ல் என் சகோதரி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது எத்தனையோ பெரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவர் குணமாக வில்லை. இறுதியில் ஒரு மார்க்கப் பெரியவரின் வழி காட்ட லால் நாங்கள் ’அல்லாஹ்’ விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தோம். என்ன ஆச்சரியம் என் சகோதரி கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்தார். இப்படித்தான் நான் திலீப்குமாரில் இருந்து ஏ.ஆர் ரகுமானாக பயணம் தொடங்கினேன் என்றார்.
ஹஜ் பயணம்
ஒவ்வொரு இஸ்லாமியரின் உன்னத கடமை ’ஹஜ் பயணம்’ ரகுமான் தனது முதல் ’ஹஜ் ஜை 2004-ல் நிறை வேற்றினார். அடுத்து 2006-ல் தாயாருடன் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
அது பற்றி ரகுமான் சொன்னது.
இந்த புனித யாத்திரை - வாழ்க்கையைப் பற்றிய எனது மதிப்பீடுகளையும், பார்வையையும் அடியோடு மாற்றி விட்டது.
அன்பு, சமாதானம், இணக்கமான சகவாழ்வு, சகிப்புத் தன்மை, நவீன காலத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவைகளைக் கொண்டதாக இஸ்லாம் திகழ்கிறது. ஆனால் சிலர் செய்யும் செயல்களால் இந்த மார்க்கம் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாம் பற்றிய அறியாமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் பெருமை
முஸ்லிம்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அண்டை வீட்டாருடன் நட்போடு பழகுவது, அவர்களை நேசிப்பது, மற்றவர்களைச் சந்திக்கும்போது புன்முறுவல் செய்வது, இறைவனை வணங்குவது, தர்மம் செய்வது ஆகியவைகளைப் பேணி வர வேண்டும். மனிதச் சமுதாயத்துக்கு முழுமையான முறையில் சேவை செய்ய வேண்டும்.
மாற்று சமய நண்பர்களை விரோதிகளாகப் பார்க்கக்கூடாது அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்க்கவோ, விமர் சிக்கவோ கூடாது. தங்கள் நடவடிக்கைகளால் உலகுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பரப்ப வாளை எடுக்கவில்லை. பதிலாக தனது முன் மாதிரியான வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவை மூலமே இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.
பரிசு
2006 ஜனவரி 6-ம் நாள் என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பரிசை இறைவனால் வழங்கப் பெற்றேன். மதீனாவில் தொழுவதற்கு ‘அல்லாஹ்’ எனக்கு வாய்ப்பைத் தந்தான். நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்தேன். அந்த அனுபவத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. அது என் பிறந்த நாள் பரிசு.
நான் ஒரு கலைஞன். எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் தொழுகையை மட்டும் கைவிடுவதில்லை. தொழுகை எனது மன அழுத்தத்தை வெளியேற்றி வேலையில் முழு நம்பிக்கையையும், உறுதியையும், ஈடு பாட்டையும் தருகிறது. இறைவன் எப்போதும் எனது அருகிலேயே இருக்கிறான் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது. மேலும் ‘மறுமையில் விசாரிக்கப்படுவேன்’ என்ற அச்சத்தை எனக்குள் கொண்டு வருகிறது. இந்த ஹஜ் பயணத்தின் மூலம் நான் எனது இறைவனால் சுத்தப்படுத்தப் படுகிறேன்’ என்கிறார் ரகுமான்.
நன்றி – ராணி வார இதழ், மணிச்சுடர் நாளிதழ்--27/28 மே 2009
Labels: இனிய செய்திகள்
Labels: மௌத்து செய்திகள்
நமதூர் நல்லாசிரியர் ஜனாப் S.M. அன்வர்தீன் அவர்களின் இல்லத் திருமண அழைப்பிதழ் வரப் பெற்றோம்.மணமக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ துஆ செய்கிறோம். . KEO. அமீரகம் .
Labels: திருமண வாழ்த்துக்கள்
அய்மான் கல்லூரியின் அதிரடி கல்வித்திட்டம் ‘ஒன்னுதான் வாங்கப் போனேன் .. ஆனால் ரெண்டு கிடைத்தது..’ என்று ஒருவர் சொன்னால் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம்.
சென்ற ஆண்டு தேர்வில் பல்கலைக்கழகத்தில் 1,2,3,4, மற்றும் 5 என முதல் ஐந்து இடங்களை பிடித்து வெற்றிவாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. B.Sc. ( Nutrition & Dietics ) பிரிவில் இவ்விடத்தைப் பிடித்திருக்கும் இக்கல்லூரி பி.காம் ((B.Com.) .) கம்ப்யுட்டர் சயன்ஸ் ( B.Sc.,Computer Science)போன்ற பாடப்பிரிவுகளிலும் பல்கலைக்கழகத்தின் தரப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்தே பல்கலைத் தரப்பட்டியலில் சிறப்பான இடம்பெற்றுவருகிறது.
மாணவிகளின் கல்வித்தரம் உயர்வரதற்காக, பாடத்திட்டம் மட்டுமல்லாமல் பொதுவான கருத்துச் செறிவுள்ள சிறப்பு வகுப்புகளையும் அவ்வப்போது தனித்தன்மை வாய்ந்தவர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. ‘தலைமைப்பண்பு’, “பட்ஜெட்” இஸ்லாத்தில் மகளிர் கல்வி:” போன்றதலைப்புகளில் பல்வேறு வகையான செமினார்கள் நடத்தப்படுகிறது.
மாணவிகளின் சுய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கல்லூரி நாட்களிலேயே டைப்ரைட்டிங், டைலரிங், கைவினைப் பொருட்கள செய்முறை மற்றும் DTP உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது,
மேலும் கல்லூரி முதல்வர் ரஜப் பாத்திமா கூறும்போது, ‘மாணவிகளுக்கு நல்லொழுக்கம், மார்க்கப் பற்று, நிர்வாகத்திறன் உள்ளிட்ட அனைத்துவகை பண்புகளையும் கற்றுத்தருகிறோம். பெற்றோர்களும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்களானால், அய்மான் மாணவிகளை தரமிக்கவர்களாக உண்டாக்க முடீயும், ‘என்றார். அய்மான் கல்லூரியில் நிர்வாகி பேராசிரியர் உமர் பாஷா அவர்கள் கூறும்போது, “புதியதாக ஆடிட்டோரியம் கட்டப்பட்டுவருகிறது. இன்டர் காலேஜ்’ போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அய்மானில் நடப்பதற்கு ஆயத்த வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்பட்சத்தில் மாணவிகளின் தனித்திறன் சிற்ப்படைய வாய்ப்பு ஏற்படும். பிற கல்லூரி மாணவிகளைவிட அய்மான் கல்லூரி மாணவிகள் நிர்வாகத்திறனில் மேலோங்கி இருக்கிறார்கள்.’ என்றார். பேட்டியின் போது அய்மான் கல்லூரியின் துணைத்தலைவர் அப்துல் வஹாப் சாஹிப் உடனிருந்தார்
Labels: கல்வி செய்திகள்
Labels: மெளத்து செய்திகள்
1976 ஆம் ஆண்டிலிருந்து துபையில் குத்தாலம் ஏ. லியாகத் அலி (வயது 54) பணிபுரிந்து வருகிறார். சமுதாய நல அமைப்பான ஈமான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளராக 10 ஆண்டுகள் சேவை புரிந்த இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஈமான் பொதுச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். சட்டத்துறை அலுவலகத்தில் நிதிப்பிரிவில் பணிபுரிந்து வரும் இவர் காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளராக இருப்பதுடன் துபை தமிழ்ச் சங்கத்தின் நிறுவன உறுப் பினராகவும் இருந்து வருகிறார். சென்னை வந்திருந்த குத்தாலம் ஏ.லியாகத் அலி துபையில் தற்சமயமுள்ள வேலை வாய்ப்பு குறித்து “இனிய திசைகள்” இதழுக்கு அளித்த பேட்டி இதோ:
? பொருளாதார வீழ்ச்சியால் துபை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது? அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் துபையை வெகு வாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ரியல் எஸ்டேட்ஸ் கட்டட நிர்மாண நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி விட்டன. வெளி நாட்டவர் களுடைய முதலீடுதான் துபையின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி யாக அமைந்திருந்தது. இப்போது ஏறக்குறைய 50 சதவிகிதம் வெளி நாட்டவர் முதலீடு கீழிறங்கி விட்டது.
? வெளி நாட்டவர் முதலீடு குறையக் காரணம்? வெளிநாட்டவர் முதலீடு செய்து மிகப்பெரிய கட்டடப் பணிக ளெல்லாம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தன. அந்த கட்டடப் பணி களுக்கெல்லாம் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன்கள் வழங்கின. இப்போது வங்கிகள் முற்றிலுமாகக் கடன் தருவதை நிறுத்தி விட்டதால் பல கட்டடப் பணிகள் அப்படி அப்படியே நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
? முற்றிலுமாகக் கட்டடப்பணிகள் நின்று விட்டனவா? அப்படி இல்லை ஏற்கனவே வங்கிக்கடன் பெற்ற பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. சமாளிக்கக் கூடிய திறமையுள்ள நிறுவனங்களின் கட்டடப்பணிகள் ஏற்கனவே இருப்பது நடந்து கொண் டிருக்கின்றன. புதிய கட்டுமானத் திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பழைய பல கட்டுமானத் திட்டங்களுக்குக்கூட வங்கிக்கடன் கிடைக் காததால் கிடப்பில் கிடக்கின்றன. விமான நிலையக் கட்டடப் பணிகள் கூட இன்னமும் முடிவடையாத நிலையே உள்ளன.
? இதனால் வேலை வாய்ப்பு நிலை என்ன ஆயிற்று? கட்டுமானப் பொறியாளர்கள், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்த நிலைமை மாறி நாளுக்கு நாள் வேலை இழக்கும் பொறியாளர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவது வேதனை தருவதாக உள்ளது.
? வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை எப்படி உள்ளன? வங்கி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் ஐ.டி. துறை வெகுவாகப் பாதித்துள்ளது. ஒவ்வொரு வங்கியிலும் ஏறக்குறைய 700 பேர் வேலை இழந்துள்ளார் கள்.’அவுட்சோர்சிங்’ இந்தியாவுக்கு வந்துவிட்டதும் இதற்கு முக்கிய காரணமாகும். அப்படி வேலை இழப்பவர்களுக்கு இந்தியாவில் இந்திய சம்பள விகிதப்படி வேலை கிடைக்கச் சில நிறுவனங்கள் உத்தரவாதம் அளித்தபோதிலும் அவை உறுதியானதாக இல்லை. ஐ.டி. துறையைப் பொறுத்தமட்டில் துபையை விட இந்தியாவே சிறந்திருக்கிறதென்று கூறலாம்.
? ஏனைய வணிகத்துறைகள் எப்படி உள்ளன? பிற வணிகங்கள் எப்போதும் போல் நடைபெற்று வருகின்றன. என்றாலும் ஏறுமுகம் இல்லை. பழைய அதே அளவிலுள்ள தொழி லாளர்களைக் கொண்டே சமாளித்து வருகிறார்கள். நான்கைந்து மாதங் களுக்கு முன்பு இவையும் பாதிக்கப்படுமென்றும் அதனால் வேலை இழப்பு வெகுவாக அதிகரிக்குமென்றும் அச்சமும் பீதியும் ஏற்பட்டன. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை தற்சமயம் பரவாயில்லை யென்றே சொல்லலாம்.
? தற்சமயம் வேலை வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது? சி.ஏ, பி.காம், எம்.காம் முதலானவற்றைப் படித்தவர்களுக்குத் தற்போது சராசரியாக வேலை வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. வங்கிப்பணிகள், கட்டுமானப் பணிகள் நீங்கலாகப் பிற பணியிடங்களில் வேலை வாய்ப்பு இருக்கவே செய்கிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையப் பணிகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது. என்றாலும் பழைய வேகமில்லை; ஊதியமும் சற்றுக் குறையவே செய்கிறது.
? பொருளாதாரச் சரிவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மீளுமா? ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்சமயம் மருத்துவமனை, வீட்டு மனைகள், வணிக வளாகங்கள் முதலியன கட்டும் பணியில் 1372 கட்டு மானத் திட்டங்கள் 900 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெற்று வருகின்றன. 566 கட்டுமானத் திட்டங்கள் பொருளாதாரத் சரிவின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டும். கைவிடப்பட்டுமுள்ளன. என்றாலும் வேலை வாய்ப்பு குறிப்பாக இந்தியர்களுக்கு நிறையவே இருக்கத்தான் செய்கிறது. செளதி அரேபியாவில் 422 கட்டுமானத் திட்டங்கள் 114 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெற்று வருகின்றன. 18 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் 124 கட்டுமானத் திட்டங்கள் 42 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெறுகின்றன. 7 திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. ஓமனில் 38 பில்லியன் டாலர் முதலீட்டில் 95 திட்டங்கள் நடந்து வருகின்றன. 8 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஹ்ரைனில் 148 திட்டங்கள் 36 பில்லியன் டாலர் முதலீட்டில் நடை பெறுகின்றன. 54 திட்டங்கள் இங்கு நிறுத்தியும் தள்ளியும் வைக்கப் பட்டுள்ளன. இந்த சரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்சி ஏற்படுமெனத் தொழில் அதிபர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
? ஐக்கிய அரபு அமீரக ஜனத்தொகை எவ்வாறு இருக்கிறது? 2990 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனத் தொகை முதன்முறையாக ஐந்து மில்லியன் அளவைக் கடக்க விருக்கிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட 7 பகுதிகள் இணைந்து 38 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகம் உருவாயிற்று. அதன் வரலாற்றில் முதல் முறையாக ஜனத்தொகை அளவு கூடவிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு இறுதியில் 4.765 மில்லியன் என இருந்தது இவ்வாண்டு இறுதியில் 5.066 மில்லியன் அளவுக்கு உயரும். ஜனத்தொகை அளவில் முதலாவதாக இருந்த அபுதாபியை 2008 ஆம் ஆண்டில் துபை விஞ்சியது. துபையில் 2008 ஆம் ஆண்டில் 1.596 மில்லியன் எண்ணிக்கை 2009 ல் 1.722 மில்லியனாக உயர்கிறது. இரண்டாமிடத்திலுள்ள அபுதாபியின் ஜனத்தொகை அளவு 2008ல் 1.559 மில்லியனாக இருந்தது 2009ல் 1.628 மில்லியனாக உயர்கிறது. மூன்றா மிடத்திலுள்ள ஷார்ஜாவின் ஜனத்தொகை 2008ல் 9,46,000 என்ற அளவி லிருந்து 2009ல் 1.017 மில்லியனாக உயர்கிறது. நான்காமிடத்திலுள்ள அஜ்மானில் 2008ல் இருந்து 2,37,000 என்பது 2009லிலும் அதே அளவு தொடர்கிறது. ராஸல் கைமாவில் ஜனத் தொகை 2,31,000 என 2008ல் இருந்தது. 2009ல் 2,41,000 ஆக உயர்கிறது. புஜீராவில் 1,43,000 (2008) லிருந்து 1,52,000 ஆக உயர்கிறது. உம்மல் குவைனில் 53000 லிருந்து 56000 ஆக உயர்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இளைஞர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 2008ல் 7,77,000 பேர் இருந்தனர். இது 2009ல் 8,30,000 ஆக உயர்கிறது. 30 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் 2008ல் 7,54,000 பேர் இருந்தனர். இது 2009ல் 8,06,000 ஆக உயர்கிறது.
? படித்து வரும் இளைஞர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை? துபையின் நிலைதான் மோசமே தவிர அபுதாபி, மஸ்கட், கத்தார் போன்ற இடங்களில் கட்டுமானப் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. எனவே கட்டுமானத் தொழில் சார்ந்த படிப்பு படித்தவர்கள் தொழிலாளர்கள் அங்கே வேலை வாய்ப்பினைப் பெற முயற்சிக்கலாம். அபுதாபியில் கட்டுமான நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் தரப்படுகிறது. இதற்கு அங்குள்ள கலீபாவே ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அபுதாபியில் இன்னும் 3 மாதங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ஆரம்பமாக இருக்கின்றன. எனவே அங்கு வேலை வாய்ப்பு பாதிப்பு வராது. துபையின் இன்றைய சூழல் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாறி விடும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாறிவிடும். எனவே இப்போது படித்துக் கொண்டிருக்கிற மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் படித்து முடித்து வருவதற்குள் இன்ஷா அல்லாஹ் துபையின் நிலைமை முன்னேற்றமடைந்து விடுமென நம்பலாம். இன்றைக்கு இன்ஜினீயரிங் மோகம் குறைந்து வருவதற்குத் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் பல்லாயிரக் கணக்கில் காலி யிடங்கள் ஏற்பட்டுள்ளதே சாட்சியாகும். மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில் உலக அளவில் வேலைவாய்ப்பு கூடியிருக்கிறது. மாணவர்கள் அதிலும் கவனம் செலுத்தலாம். இறையருளால் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். தன்னம்பிக்கை யோடு இளைஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்திப்பு : சேயோன்.
Labels: துபாய் செய்திகள்


