பெண்கள்"
பெண்கள்"
Labels: சிறப்புச் செய்திகள்
முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு: மிஸ்ரா கமிஷன் பரிந்துரை
DINAMANI First Published : 19 Dec 2009 01:51:45 AM IST
Labels: சிறப்புச் செய்திகள்
மொபைல் போனில் பாத்ரூம் பதிவுகள்: பள்ளிகளில் பரவுகிறது 'பகீர்'
கோவை: கோவையில் உள்ள அந்த தனியார் பள்ளியில் மாணவியர் பயன் படுத்தும் கழிப்பறை சுவற்றில் மேற்கூரை இல்லை. சுவற்றின் மறுபுறமிருந்து மெல்ல உயரும் சக மாணவனின் கேமிரா மொபைல் போன், மாணவியரின் அசைவுகளை பதிவு செய்து மெல்ல தாழ்கிறது. பள்ளிகளில் மொபைல் போன் தடையை அமல்படுத்தாத பள்ளி நிர்வாகங்கள் மற்றும் கல்வி அதிகாரிகளால் நிகழும் அவலத்தின் ஒரு துளி விஷம்தான் இது.
பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை இருந்தும், பள்ளி நிர்வாகங்கள் கண்டுகொள் ளாததால், தடைகள் பற்றிய கவலை இல்லாமல், மாணவர்கள் தாராளமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பள்ளி நிர்வாகங்களின் ஆதரவுடன் மாணவர் கள், தவறான பாதையில் செல் லும் போக்கு அதிகரித்து வருகிறது. அமைதியாக சென்று கொண்டிருந்த மனிதர்களின் அன்றாட வாழ்வில் மொபைல் போன் நுழைந்து, இப்போது உடலின் தவிர்க்க முடியாத ஒரு உறுப்பு ஆகி விட்டது. உடற்கோளாறுகள் அதிகம் ஏற்பட்டாலும், யாரும் கவலைப்படுவதாக இல்லை. குளிக்கும் நேரத்தை தவிர மீதமுள்ள நேரங்களில் மொபைல் போனே கதியென கிடக்கும் நிலை.
பெற்றோரின் பழக்கம் பிள் ளைகளையும் தொற்றிக் கொண்டு விட்டது. தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களிடம் புத்தகங்கள் இருக்கிறதோ இல் லையோ, மொபைல் போன் தவறாமல் இடம் பிடித்து விடுகிறது. வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே "எஸ்.எம். எஸ்.,' மூலம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால், பாடத் தில் கவனம் சிதறுகிறது. உயர்நிலை வகுப்புகளில் படிக் கும் மாணவர்களின் மொபைல் போன்களில், மனதில் வக்கிர உணர்வை தூண் டும் ஆபாசப் படங்கள் சர்வ சாதாரணமாக இடம் பிளன. சக மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், மாணவியருக்கும் இவற்றை பரிமாறி, அவர்களின் மனதை தடம் புரள செய்கின்றனர்.
பள்ளிகளில் மொபைல் போன்கள் பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்திருந்தும், தடை அமலான புதிதில் அவற்றை கடுமையாக பின் பற்றிய தனியார் பள்ளி நிர்வாகத்தினர், அதன் பின் சட் டத்தை காற்றில் பறக்க விட்டு விட்டனர். இதனால், பள்ளி வரும் மாணவர்கள் பாதை மாறி செல்லும் போக்கு உருவாகி வருகிறது. வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது ஆசிரியர்களும் மொபைல் போனில் பேசுவதால், மாணவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். "ஷூ'வுக்கு அடியிலும் "சாக்ஸ்' மறைவிலும் மறைத்து வைத்து "சைலன்ட் மோடில்' மொபைல் போன்களை பயன் படுத்தி வந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கண்டு கொள்ளாததால், இன்று வெளிப் படையாகவே சட்டைப் பையில் வைத்து பயன்படுத்துகின்றனர்.
தனியார் பள்ளிகளின் அத்துமீறல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், இவற்றை குறித்து கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் வேதனை. இதனால், சக மாணவியரை அவர்களுக்குத் தெரியாமல், கேமரா மொபைல் போன்களில் படம் பிடித்து நண்பர்களுக்கு "பாஸ்' செய்து ரசிக்கும் குரூர கலாச்சாரம் மாணவர்களிடையே பரவி வருகிறது. நாளடைவில் இந்த படங்கள், இன்டெர்நெட்டில் பலான படங் களாகவும் புளூ பிலிம்களாகவும் "கிராபிக்ஸ்' முறையில் உருவ மாற்றம் செய்யப்பட்டு, ஒன்றும் அறியாத மாணவியர் ஆபாச படங்களில் நடிப்பது போல் மாற்றப்படுகிறது.
மாணவியர் பயன்படுத்தும் கழிப்பறை சுவர்களின் மேற்பகுதியில் மெல்ல உயரும் கேமிரா மொபைல்கள், மாணவியரின் அனைத்து அசைவுகளையும் சத்தமில்லாமல் பதிவு செய்து தாழ்கின்றன. இப்படி பதிவான காட்சிகளை மாலையில் நண்பர்களுடன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்த அப் பள்ளி மாணவர், ஆசிரியரிடம் பிடிபட்ட சம்பவம் சமீபத்தில் கோவையில் நடந்துள்ளது. அப்பாவி மாணவியரின் எதிர்காலத்துக்கு வேட்டு வைக் கும் இந்த மொபைல் போன் கலாச்சாரம், பள்ளிகளில் பரவாமல் தடுப்பது, பெற்றோர் கைகளில்தான் உள்ளது. விலை உயர்ந்த மொபைல் போன்களை வாங்கி தந்து, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை தாங்களே குழிதோண்டி புதைக் கும் பெற்றோரே இதற்கு காரணம். எந்த காரணத்துக்காகவும் பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கித் தருவதில்லை என்பதில் பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும். பள்ளி நன்னடத்தை விதிகளில் மொபைல் போன் பயன் படுத்த தடை விதிக்கும் சட்டத் தையும் பள்ளி நிர்வாகங்கள் உட்படுத்த வேண்டும். கல்வி அதிகாரிகள் இனியாவது சுதாரிக்க வேண்டும்.
அசரடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்: அரசு, மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் சமீப காலமாக, பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் கெடுபிடி குறைவு என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களே அதிகமாக பாதிக் கப்படும் நிலை உள்ளது. மாவட்ட பள்ளி கல்வித் துறை இனியும் தாமதிக்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
நன்றி: தினமலர் ஜூலை 30.07.2009
Labels: சிறப்புச் செய்திகள்
Labels: சிறப்புச் செய்திகள்