மேல்நிலைப்படிப்பு முடித்தவர்களும், அவர்தம் பெற்றோர்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரமிது. மருத்துவமா? பொறியியலா? அல்லது கலை மற்றும் அறிவியல் படிப்புகளா? எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது? படிப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டால் போதுமா இந்த காலத்தில்? சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்காவிட்டால் படிப்பை முடித்தாலும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும் பேரபாயத்தை தவிர்க்க முடியாததாகிவிடுமே. எனவே சரியான கல்லூரியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானதொன்று, சரி கல்லூரியும் தயார். அடுத்து இருப்பது படிப்புக் கட்டணம். அரசு பல்கலை/கல்லூரிகளில் இடம் கிடைத்தால் மட்டுமே கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும். ஆனால், எல்லோருக்கும் அரசு பல்கலை/கல்லூரிகளில் இடம் கிடைக்காதே? அப்படியிருக்கையில் அடுத்திருக்கும் ஒரே வாய்ப்பு தனியார் கல்லூரிகள் தான்.
மேலும் படிக்க இங்கே கிளிக்குங்கள்
Labels: பயனுள்ள தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக