இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள்

காலையில் பாண், இரவில் கடையில் வாங்கிய கொத்து அல்லது நூடில்ஸ். பல வீடுகளில் தினமும் இவ்வாறு கடை உணவுதான்.சமைப்பதற்கும் நேரம் இல்லை.மதியம் ஒரு நேரத்திற்கு மட்டும் சோறு, அதுவும் சமைப்பதற்கு இலகுவான அதிக காஸ் செலவாகாத நன்கு 'பொலிஸ்' பண்ணிய சம்பா அரிசி. அல்லது அதிலும் சுலபமான நூடில்ஸ்.இவ்வாறுதான் காலம் கழிகிறதுஇன்றைய வாழ்வு நெருக்கடிகளுக்கு உள்ளாகிவிட்டது. நீண்ட வேலை நேரங்கள், கணவனும் மனைவியும் உழைக்கப் போக வேண்டிய நிர்ப்பந்தம், பிள்ளைகளின் படிப்பு ரியூசன் என நேரத்துடன் போராட வேண்டிய வாழ்க்கை. மிகுதியுள்ள சொற்ப நேரம் தொலைக்காட்சியில் முடங்கிவிடுகிறது. எனவே சமையலிலும் சாப்பாட்டிலும்தான் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது.இதனால் எமது பாரம்பரிய உணவுகளான குத்தரிச் சோறு, தவிட்டுமா இடியப்பம், அரசிக் கஞ்சி, ஒடியல் பிட்டு, குரக்கன் ரொட்டி, களி போன்ற பலவும் சிலருக்கு மறந்தே போய்விட்டன.
நன்றி: ஹாய் நலமா?