கூத்தாநல்லூர் ( சிங்கப்பூர் ) சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் குடும்ப ஒன்றுகூடும் நிகழ்ச்சி, கெளரவ ஆலோசகர், தொழிலதிபர் ஹாஜி T.M. பதுருதீன் அவர்கள் தலைமையில் 10.10.2009 சரியாக 6 மணியளவில் சிங்கப்பூர் பென்கூலேன் பன்நோக்கு மண்டபம் ( 2 வது மாடியில் )
நடைபெற்றது.


கூலான் இல்யாஸ் அவர்களின் மகன் சக்கில் அவர்கள் கிராத் ஓதி துவக்கினார்



டொக்கு முஹம்மது மைதீன் அவர்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.




கெளரவ ஆலோசகர், தொழிலதிபர் ஹாஜி T.M. பதுருதீன் அவர்கள், அல்ஹாஜி கூலான் A.M. பாவா மைதீன் B.A அவர்களுக்கு சமூக சேவைக்கான விருது வழங்கி கெளரவித்தார்.






நமதூர் மக்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் கணக்கு சம்பந்தமான விளையாட்டுகளை கணக்கு புலி பரவக்கோட்டையார் அமானுல்லா அவர்கள் மிக சிறப்பாக நடத்தினார்.





டொக்கு முஹம்மது மைதீன் அவர்கள் கூத்தாநல்லூர் ( சிங்கப்பூர் ) சங்கத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்


கூத்தாநல்லூர் ( சிங்கப்பூர் ) சங்கத்தின் புதிய நிர்வாகிகள் :-
தலைவர் : கணக்கபிள்ளை ஹாஜா மைதீன்
துணை தலைவர் 1 : குத்தகைக்காரர் ஜெகபர் சாதிக்
துணை தலைவர் 2 : ஆதம் முஸ்தாக் அகமது
கெளரவசெயலாளர் : சேமீராலம். S. சிராஜுதீன்
துணை செயலாளர் : மீர்லன் சார்லஸ் மைதீன்
பொருளாளர் : ஆசியப்பன் ஹாஜா ஜபருல்லாஹ்
துணை பொருளாளர் : ஒட்டகனி ஹாருன் ரசித்



நர்கிஸ் இதழின் கெளரவ ஆசிரியர், சமுதாய ஆர்வலர் Dr. ஹிமானா செய்யது அவர்கள் ஒற்றுமை என்ற தலைப்பில் பேசினார், மற்றும் நமதூர் பெருமையையும் பாரம்பரியத்தையும் பற்றி பேசி அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்தார்





புதுவீட்டு பஷீர் அகமது அவர்கள் மேஜிக் நிகழ்ச்சி நடத்தி சிறுவர் சிறுமியரை மகிழ்ச்சி அடைய செய்தார்.



இறுதியாக கெளரவ ஆலோசகர், தொழிலதிபர் ஹாஜி T.M. பதுருதீன் அவர்கள் கூத்தாநல்லூர் ( சிங்கப்பூர் ) சங்கத்தின் இணையதளத்தை தொடங்கிவைத்தார்.


*************** www. koothanallur.sg
இறுதியாக கெளரவ ஆலோசகர், தொழிலதிபர் ஹாஜி T.M. பதுருதீன் அவர்கள் கூத்தாநல்லூர் ( சிங்கப்பூர் ) சங்கத்தின் இணையதளத்தை தொடங்கிவைத்தார். பிறகு நன்றி உரை நிகழ்த்திய ஹாஜி T.M. பதுருதீன் அவர்கள் கூத்தாநல்லூர் ( சிங்கப்பூர் ) சங்கத்தின் சிறப்பை பற்றியும், அதை வழிநடத்த தேவையான சில ஆலோசனைகளையும் புதிய நிர்வாகிகளுக்கு வழங்கினார், பின்னர் நமதூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ் பயனை விளக்கியதுடன், புதிய ஆம்புலன்ஸ் வாங்க நிதி உதவி அளிக்குமாறு சங்கத்தினரை கேட்டுக்கொண்டார், பிறகு Dr. ஹிமானா செய்யது அவர்கள், ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்யுமாறும், அல் அமான் இளைஞர் இயக்கத்தின் சேவையை பாராட்டி பேசினார்,




சரியாக 10:30 மணியளவில் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஹாஜி T.M. பதுருதீன் அவர்கள் விருந்து ஏற்பாடு செய்தார்.
தகவல்: சேமீராலம்.S.சிராஜுதீன், கெளரவ செயலாளர்