அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது KEO மூலம் சமுதாய பொதுச்சேவைகள் செய்து வருவது தாங்கள் அறிந்ததே! அல்ஹம்துலில்லாஹ்.

இச்சேவைகளின் தொடர்ச்சியாக நமதூர் வாசிகள் பயன்பெறும் வகையில், தன்னலம் காணாது ஊர் நலம் காண அயராது பாடு பட்டு வரும் நமதூர் பெரிய பள்ளி வாயில் நிர்வாக தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் பலமுறை நேரிலும் கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு ஊர் பாதுகாப்பு சபையின் அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு சபை இயங்கி வருகின்றது.
இந்த பாதுகாப்பு சபை திட்டம் நிதிப் பற்றாகுறையால் தொய்வடைந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நாமும் நமது பங்கினை செலுத்தி வருகின்றோம்.
நமதூரில் முன்பு திருடர்களின் ஊடுறுவலால் பல குடும்பங்கள் உடமைகளை இழந்து தவித்து வந்ததையும், இரவு நேரங்களில் பல வகையான தீங்குகள் நடை பெற்றதையும் நாம் கருத்தில் கொண்டு பாதுகாப்பு சபை கடந்த வருடம் போல் இந்த வருடமும் (2011 - 2012 ) நவீனப் படுத்தி செயல்பட உள்ளது.
மேலும், சென்ற வருடம் போல் இந்த வருடம், பெரிய பள்ளி நிர்வாக சபையின் அனுமதியுடன் UAE ல் வாழும் நமதூர் சகோதரர்களிடம் வருட சந்தாவாக 50 /- திர்ஹம் வசூல் செய்து அனுப்பி வைத்து அவர்களின் வேலை பளுவை இலகுவாக்குவதுடன், நாம் வசூல் செய்யம் சகோதரர்களின் இல்லங்களில் அந்த குறிப்பிட்ட ஒரு வருட காலத்திற்கு ஊரில் வசூல் செய்யாமல் இருக்க வேண்டும் என நாம் கேட்டதற்கிணங்க பெரிய பள்ளி நிர்வாகம் அதன்படி செயல் படுத்தி வருவது தாங்கள் அறிந்ததே!
சென்ற செப்டம்பர் (01-09-2010) முதல் பாதுகாப்பு சபையை தொடங்கி சிறப்பாக பெரிய பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது. தாங்கள் சந்தாவை காலதாமதம் படுத்தாமல் கொடுத்து உதவும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம். மற்ற நாடுகளில் வாழும் நமதூரை சேர்ந்த அன்பர்கள்  நண்பர்கள் அனைவரும் பாதுகாப்பின்(பாதுகாப்பு சேவை)
அவசியத்தை கருதி துரிதமாக சந்தா தொகையை பெரிய பள்ளிவாயில் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க முயற்சி செய்ய வேண்டுகிறோம்.
ஆகவே, நமதூரையும், நமது சமுதாயத்தை காப்பாற்றவும், எளியவர்களின் துயர் துடைக்கவும் தங்களை போன்ற நல்லுலங்கள் இத்திட்டத்தில் பங்கேற்று, ஊரின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் தாங்களின் பங்கினை செலுத்தி ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.
தாங்கள் எல்லோரும் நமதூரின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த தங்களது மேலான ஆலோசனைகளை பெரிய பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
வெளிநாடுகளில் சந்தா வசூல் சரியாக ஆகாத பட்சத்தில் ஊரின் பாதுகாப்பு சேவை இரண்டொரு மாதங்களில் நின்று விடவும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ் தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தார்களுக்கும் என்றென்றும் நற்கூலியையும் பரக்கத்தையும் ரஹ்மத்தையும் சலாமத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்!!!
என்றும் ஊர் நலனில் அக்கறையுள்ள KEO
கீழே குறிப்பிட்ட நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு தாங்களின் பங்கினை செலுத்தி ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
துபாய்:-
1. கலனி அஹமது மைதீன் 050 5988560
2. P.M.A. முஹம்மது இப்ராஹிம் 050 7591905
3. அல்வாணி அக்பர் அலி 055 3933248
4. நோட்டன் M.E. தாஹிர் அலி 050 4969409
5. M.M. ரியாஸ் அஹமது 050 5768011
ஷார்ஜா:-
1. M.R.E. அப்துல் ரஹ்மான் 050 6261360
2. ஜானா அப்துல் நாசர் 050 5178375
3. H.A. அப்துல் பத்தாஹ் 050 4995519
4. கோஸ் நூருல் அமீன் 050 4529535
5. P.A. ரபிக் முஹம்மது 050 5283106
6. K.J. முஹம்மது இப்ராகிம் 050 4963986
அபுதாபி:-
1. S.A. ஆதம் அலி 050 1301203
2. M.A. ஷாகுல் ஹமீது (செல்லப்பா) 050 5720476 
                                                                     அன்புடன்                                                                        
கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் - துபாய்.