அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, துபாய் அன்னபூர்னா ரெஸ்டாரண்டில் KEO தலைவர் ஹாஜி ஜனாப் கலனி அஹமது மைதீன் அவர்கள் தலைமையில் ஹாஜி ஜனாப் P .A . முஹம்மது சிராஜுதீன் அவர்கள் கூட்ட தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தினார்கள்.
ஜனாப் T .M .H . முஹம்மது ஆரிப் அவர்கள் கிராஅத் ஓத KEO வின் பொதுக்குழு கூட்டம் இனிதே துவங்கியது.
கூட்ட தலைவர் ஜனாப் சிராஜுதீன் அவர்கள் நமது முன்னோர்கள் ஆற்றிய பொது சேவை, அவர்கள் நமக்காக ஏற்படுத்தி தந்துள்ள ஊர் கட்டமைப்பு, பொது ஸ்தாபகங்கள், நமதூரின் பாரம்பரியம், கட்டுக்கோப்பு மற்றும் சிறப்புகள் குறித்து விரிவாக பேசினார்கள்.
அதனை தொடர்ந்து KEO தலைவர் ஹாஜி ஜனாப் கலனி அஹமது மைதீன் அவர்கள் KEO வின் சேவைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்கள்.
ஜனாப் N . M . E . தாஹிர் அலி அவர்கள் ஆண்டு அறிக்கை வாசிக்க, தணிக்கையாளர் ஜனாப் S . M . H . பாவா முஹைதீன் அவர்கள் வரவு செலவு அறிக்கை வாசித்தார்கள்.
ஜனாப் K.J. சேட் முஹம்மது அப்துல்லாஹ் அவர்கள் நமதூரில் நடைபெற உள்ள KEO வின் கோடை கால பெண்கள் மார்க்க கல்வி வகுப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள்.
அதனை தொடர்ந்து, வந்திருந்த உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. அதில் ஊர் பாதுகாப்பு (கூர்க்கா), இரவு நேர அவசர மருத்துவர், ரேசன் கடை விநியோகம் பெண்கள், ஆண்களுக்கு தனி தனியாக அமைக்க வலியுறுத்தல், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் நிகாப் அணிந்து செல்ல ஆவன செய்தல், மார்க்க கல்விக்காக கூடுதல் செலவு செய்தல், மற்றும் KEO மாத சந்தா நிர்ணயித்து வசூல் செய்வது சம்பந்தமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து KEO புதிய நிர்வாகத்தில் ஆவன செய்வது என முடிவுசெய்யப்பட்டது.
அதன் பின்னர், விருப்ப ஓட்டெடுப்பு மூலம் புதிய நிர்வாகிகள் (தலைவர், செயலாளர், பொருளாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற நிர்வாக உறுப்பினர்களும் கலந்து ஆலோசித்து நியமிக்கப்பட்டனர்.
ஜனாப். K .J. முகம்மது நசீருதீன் அவர்கள் நன்றியுரை வாசிக்க, இரவு உணவு பரிமாறப்பட்டு, துவாவுடன் கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.
புதிய நிர்வாகம் சிறப்பாக செயல்பட தாங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் துஆவையும் நல்கிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
செயற்குழு கூட்டங்களில் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, மற்ற சகோதரர்களும் கலந்து ஆலோசனை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
Posted by Thahir
0 comments:
கருத்துரையிடுக