சென்ற 27 -10 -2012 காலை 11.30 மணியளவில் ( துபாய் மம்ஜார் பார்க் திடலில்) துடங்கி மாலை 7 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது. அச்சமயம் நமதூர் வாசிகள் (ஆண்கள் / பெண்கள்/ குழந்தைகள்) 100 க்கும் அதிகமானோர் பெரும் திரளாக ஒன்று கூடி தங்களது பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதோடு, நமதூர் பொது நிகழ்வுகள் குறித்தும் பேசப்பட்டது, மதியம் உணவிற்கு பிறகு விளையாட்டு போட்டிகள் பெரியவர்கள், சிறியவர்கள் என நடத்த பட்டு பரிசுகளும் வழங்க பட்டது. இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று வருகை புரிந்தோர் அனைவராலும் வேண்டுகோள் வைக்கபட்டது.

இதற்கான ஒருகிணைபுகளை நமது KEO வின் அங்கத்தினர்கள் குறிகிய காலகட்டத்தில் பல சிரமங்களுக்கு இடையில் செவ்வென செய்து முடித்தமைக்கு நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்வுக்கு பரிசு பொருள் தந்து உதவியவர்களுக்கும் மற்றும் உறுதுணையாக நின்ற அணைத்து KEO நண்பர்களுக்கும் KEO வின் சார்பில் நன்றி தெரிவிக்க பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.