வெளிநாட்டில்  உள்ள நமதூர்  அன்பர்களுக்கு  வேண்டுகோள !  சிந்தியுங்கள்!!

ஊர் பாதுகாப்பு சேவை  தேவையா ?  இல்லையா ?

வெளிநாட்டில் உள்ள அனைவர்களும் விரைவாக  முடிவு  எடுங்கள்  

அல்லாஹ்    நிச்சயமாக  ஊருக்கு  பாதுகாப்பு அளிப்பான்                          

இன்ஷா அல்லாஹ் 

கூத்தாநல்லூரில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு

கூத்தாநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை  திருடிச்சென்ற மர்ம மனி தர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கூத்தாநல்லூர் ஜாவியா தெருவை சேர்ந்தவர் குபுதாஜு தீன். இவரது மனைவி ஜெகபர் நாச்சியா(வயது80). இவர்க ளது மகன் அன்வர்அலி சென் னையில் வசித்து வருகிறார்.
உடல்நிலை சரியில்லாத ஜெகபர்நாச்சியா சென்னை யில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று அங்கேயே சில நாட் கள் தங்கி சிகிச்சை பெற்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
35 பவுன் திருட்டு
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகை கள் மற்றும் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் திருடப் பட்டு இருந்தன.

இதுகுறித்து அன்வர்அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக விரைந்து வந்து கூத்தாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிவவடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவ ழைக்கபட்டு சோதனை நடத் தப்பட்டது.   

வெளிநாட்டில் உள்ள அனைவர்களும் விரைவாக  முடிவு  எடுங்கள்  

நன்றி:  தினத்தந்தி  10.03.2013