KEO-NEW AGENDA

அல்ஹம்து லில்லாஹ் ..! எல்லா புகழும் இறைவனுக்கே..!

வல்ல நாயனின் கிருபையாலும், நமதூர் நண்பர்களின் ஒத்துழைப்பாலும் இன்று அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு பொது கூட்டம் சிறப்புடன் நடை பெற்று முடிந்தது. ஊரின் நலனை மட்டும் என்றும் தன்னலமாக கொண்ட நமது KEO விரைவில் " KNR Clean City " / பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பூங்கா / நம் இளைய தலைமுறைகள் ஆரோக்கியமாகவும் உடல் நலனை பேணவும் உடல் பயிற்சி மையங்கள்/ பெண்கள் இல்லம்  ஆகிய அணைத்து திட்டங்களையும் விரைவில் செயல் படுத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதற்கான விபரம் விரைவில் வெளியிடப்படும். மேலும், அபுதாபியில் விரைவில் வட்டியில்லா சேமிப்பு கடன் திட்டம் செயல்முறையில் வரும் என்பதோடு "KEO - Abu Dhabi " துணை அமைப்பு விரைவில் தொடங்கப்பட்டு அணைத்து சேவைகளும் தலைமையின் ஆலோசனையின் கிழ் இவை செயல் படவுள்ளது என்பதை இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன் இரவு நேர அவசர மருத்துவர் அமைப்பது குறித்து  ஆலோசனைகள் நடத்து வருகின்றது கூடிய விரைவில் முறையாக தகவல்கள் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

யா அல்லாஹ் நாங்கள் செய்ய கூடிய அணைத்து சேவைகளும் நன்மை பயக்கும் வண்ணம் நீயே என்றும் துணை நிற்பாயாக ஆமின் !!!