சேவைகள்

1994 ஆண்டு ஜனவரி 21 தேதி வெள்ளிக்கிழைமை ஆரம்பம் செய்யப்பட்டது.

  1. நலிவடைந்தோர் உதவித்திட்டத்தின் கீழ் வருட வருடம் நமதூரை சேர்ந்த மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்தார்களுக்கு தற்காலிகமாக உதவி செய்யப்பட்டது.
  2. மார்க்க கல்வியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் நமதூர் மாணவ மாணவியர்களுக்கு மார்க்க கல்வியில் அதிக ஏற்படுத்த திருக்குரான் கிராத்போட்டி, மனனப்போட்டி, பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டி ஆகியவற்றை 1995, 1996 ஆண்டுகளில் சிறப்பாக நடத்தி அதில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டதுமாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
  3. உலக கல்வியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கிழ் அதிக மதிப்பெண் பெற்று கல்லூரி படிப்பை தொடரமுடியாத நமதூரை சார்ந்த நன்கு மாணவர்களுக்கு அவர்களின் கல்லூரி மற்றும் ஹோச்டல் செலவுகளை ஏற்று கொண்டது.
  4. திருமண உதவி திட்டத்தின் கிழ் நமதூரை சேர்ந்த ஏழை குமர்களின் திருமனதிர்க்கென திருமண உதவி தொகையாக இதுவரை 41 குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.
  5. வருட ஒவ்வொரு வருடமும் புனித ரமலான் மாதத்தில் துபையில் வாழும் நமதூரை சேர்ந்தவர்களிடமிருந்து பித்ரு சதக்கா வசூல் செய்து நமதூரை சேர்ந்த ஏழ்மையான குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு இத்தொகை வழ்ங்கி வருகிறோம்.
  6. அவசர கால ஊர்தி திட்டத்தின் கிழ் நமதூர் மக்களின் நீண்டகால அவசியமான தேவைகளில் ஒன்றான அவசர கால ஊர்தி துபை வாழ் மக்களின் பெருவாரியான நன்கொடையலும் அல் அமான் இளைஞர் இயக்கத்துடன் இணைந்தும் வாங்கப்பட்டு மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகின்றது.
  7. புனித ரமலான் மாதத்தில் நமதூடுக்கு வரும் முசாபிர்களுக்கு முன்நேரம் மற்றும் ஸஹர் (இரு வேளை) சாப்பாடு உதவி செய்து வரும் காமுதில் இஸ்லாம் சபைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 30 நாட்களும் ஸஹர் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடந்தேறி வருகின்றது.
  8. ஒவ்வொரு வருடமும் துபையில் இருந்து ஹஜ்ஜுக்கு சென்று வருகின்ற கூத்தநல்லூர் ஹாஜிகளுக்கு சிறப்பான முறையில் வரவேற்ப்பு அளிக்கப்படுகின்றது.
  9. சின்னப்பள்ளி வாயில் நிர்வாகம் கேட்டு கொண்டதிற்கிணங்க சின்னப்பள்ளி மதராசாவின் சென்ற ஆண்டு வரவு செலவு பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் தலைவரின் தனி முயற்சியால் வசூல் செய்யப்பட்டு நிதி அனுப்பி வைக்கப்பட்டது.
  10. மேலப்பள்ளி நிர்வாகம் கேட்டுகொண்டதிர்கிணங்க மேலப்பள்ளி வாயிலில் நடைபெறும் மதரசாவின் ஆண்டு விழா செலவிற்கு இந்த இயக்கத்தின் மூலம் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.
  11. அக்கறை புதுத்தெரு பள்ளிவாயில் கேட்டு கொண்டதற்கிணங்க அப்பள்ளியில் நடந்து வரும் மதராசாவின் ஆண்டு செலவிற்கு இந்த இயக்கத்தின் மூலம் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.
  12. பெரிய பள்ளி வாயில் கேட்டுகொண்டதற்கிணங்க வருடா வருடம் பெரியப்பள்ளி வாயில் மஹபூப் சுபுசாணி கந்தஸல்லாஹு ஷிரகுல் அஜிஸ்அவர்களின் நினைவு நாளை கொண்டாடும் விதத்தில் ஊர் பொது மக்களுக்குவிநியோகம் செய்யும் ஸீரநி செலவுக்காக 1999 நிதி அனுப்பி வைக்கப்பட்டது.