இன்று 21/12/2008 போலியோ சொட்டு மருந்து

போலியோ நோய் தடுப்புக்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறுகிறது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மறவாமல் நாளை காலையிலேயே முதல் வேலையாக அருகில் உள்ள முகாமுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
போலியோ நோய் தடுப்புக்காக நாடு தழுவிய அளவில் 14வது ஆண்டாக நடத்தப்படும் இந்த சிறப்பு முகாமின் முதல் கட்டம் நாளை நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள், பொது சுகாதார மையங்கள் மட்டுமின்றி மக்கள் அதிக அளவில் கூடும் ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சத்துணவு மையங்கள் என பல்வேறு இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாமும் பங்கேற்க, தவறாமல் குழந்தைகளுக்கு நாளை முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து கொடுப்போம்.

நன்றி நிகழ்வுகள்.காம்

மக்களுக்கு தெரிவியுங்கள்.