மாரடைப்பு பற்றி

Thanks to Changi General Hospital

இருதயம் என்பது என்ன ?


இருதயம் என்பது சுமார் கைமுட்டி அளவில் உள்ளதான ஒரு வலுவான தசை உறுப்பு. இது, மார்பின் நடுவில் அமைந்துள்ளது. ஒரு உடல் நலமுள்ள ஒய்வில் உள்ள வயது வந்தவரின் இருதயம் நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கும். இருதயத்தின் வேலை, தமனிகள் மற்றும் சிரைகள் எனப்படும் இரத்தக் குழாய்களின் (மெல்லிய நீண்டு சுருங்கும் தன்மையுடைய குழாய்கள்) வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் இரத்தத்தினைச் செலுத்துவதாகும். தமனிகள், உயர்வளி மற்றும் பிற உடலுக்கான ஊட்டச் சத்துகள் நிரப்பப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. சிரைகள், "படன்படுத்தப்பட்ட" இரத்தத்தினை இருதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

மாரடைப்பு என்பது என்ன ?


அளவுமீறிய அல்லது அளவகடந்த இதய தசை வீக்கம் என்பது (இதய தசை வீக்கமே) சதாரண மக்களின் (அ) பாமர மக்களின் மொழியில் இதய அடைப்பு (ஆ) மாரடைப்பு எனப்படுகிறது. இரத்த உறைவினாலும் கொழுப்பு இயத்தின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஒட்டத்தில் முற்றிலுமாக தடை ஏற்படும்போது இந்த இதய அடைப்பு ஏற்படுகிறது.

இதயத்தின் தசை அழிவுற்றதைப் போல (அ) அழிவுறுவதால் இதய அடைப்பு ஏற்படும் போது ஒரு மனிதன் கடுமையான வலியை உணர்வான்

மாரடைப்பின் காரனிகளைக் கொண்டவர்கள் யார்?


பின்வரும் இன்னல் காரனிகளைக் (ஸிவீsளீ திணீநீtஷீக்ஷீs) கொண்டவர்கள் மாரடைப்பினை வளர்ப்பதற்குச் சார்புடையவர்கள்.

  • இரத்தத்தில் உயர்ந்த அளவு கொழுப்புப்பொருள்:
    இருதயம், குறுக்கப்பட்ட இரத்தக்குழாய்கள் வழியாக இரத்தத்தினைத் தள்ளுவதற்கு மிகவேகமாகவும், கடினமாகவும் பாய்ச்சவேண்டும். இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் உயர் மட்டம் மற்றும் தெவிட்டிய கொழுப்புகள் குறுக்கப்பட்ட இரத்தக் குழாய்களுக்குக் காரணமாகின்றன.
  • உயர் இரத்த அழுத்தம் :
    இரத்த அழுத்தம் என்பது இரத்தக்குழாய்களின் சுவர்களின் மீது இரத்தத்தின் விசையாகும். உயர் இரத்த அழுத்தம் விசையை மிகுதிப்படுத்தி இரத்தக்குழாய்களின் மென்மையான உட்புற உறையைச் சேதப்படுத்தும். கொலஸ்ட்ராலும் கொழுப்பும் சிதைக்கப்பட்ட சுவர்களினூடே சேர்ந்து வளர்ந்து
    உள்ளுறுப்பைத் தடைசெய்யும். விளைவாக, குறுக்கப்பட்ட குழாய்கள் வழியாக இரத்தத்தினைப் பாய்ச்ச கடினமாக பம்ப் செய்ய வேண்டும்.
  • சிகரெட்டுபுகை பிடித்தல்
    சிகரெட்டுகளில் உள்ள கார்பன்மானாக்ஸைடும்,நிகோடினும் உயிரணுக்கள் உயர்வளி பெறுவதைப் பாழாக்குகின்றன. உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் அளிப்பினைச் செய்வதற்காக இருதயம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிவரும். புகைபிடித்தல் இரத்தக் குழாய்களுக்குள் தட்டு (ஜீறீணீஹீuமீ) சேகரிப்புகளை ஊக்குவிக்கும். உறைந்த கட்டி உருவாகும் இன்னைல மிகுதிப்படுத்தும்.
  • உடற்பயிற்சி இன்மை :
    உடற்பயிற்சி இன்மையால் உடல் தொங்கலாகிறது. உங்கள் இருதயம் தகுதியிழந்து விட்டால், உடல் நலமும் தகுதியும் கொன்ட ஒருவரை ஒப்பிட நீங்கள் மாரடைப்பை எதிர்கொள்வது இருமடங்காகிவிடும்.
  • அளவு மீறிய எடை :
    அளவு மீறிய எடை கொண்டவரின் எடை காரணமாகக் கடினமாக பம்ப் செய்தல் வேண்டியிருக்கும், செயல்பாட்டிற்கு அதிகமான உயர்வளி தேவைப்படும்.
  • அழுத்தம்:
    குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீரை அதிகமாக உற்பத்தி செய்வதின் மூலம் நம் உடல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.இது இதயத்தை மிகக் கடினமாகவும் வேகமாகவும் செயலாற்றுமாறு செய்கிறது.இந்த அதிக இறைப்பால் ரத்தக்குழாய் இறுகி குறுகிவிட காரணமாகிறது.
  • நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி)
    இரத்தத்தில் சர்க்கரையின் உயர்மட்டம், இரத்தக் குழாய்கள் குறுக்க மடைவதனையும், தடிப்பாவதையும் விரைவுப்படுத்துகிறது. இது, இருதயத்திற்கு இரத்தம் பாய்வதைக் குறைப்பதற்குக் காரணமாகின்றது.
  • பால் (நிமீஸீபீமீக்ஷீ)
    ஆண்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • வயது
    இரத்தக்குழாய்கள் வயதினோடு குறுக்க மடைவதால் வயது முதிர்வு,மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மிகுதிப்படுத்துகிறது.
  • மரபு
    உங்கள் குடும்பத்து உறுப்பினர் ஒருவர் இருதய நோய் வரலாறு உடையவர் என்றால், நீங்கள் மாரடைப்பு அடைவதற்குரிய வாய்ப்பு அதிகமாயிருக்கும்.

(இடர்) எச்சரிக்கை


பின்வரும் ஏதேனுமொரு அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு மாரடைப்பு இருக்கலாம்.

  • ஒரு சில நிமிடங்களுக்குமேல், உங்கள் மார்பின் மையத்தில் வலியும் அழுத்தமும்; வலி அல்லது அழுத்தம் இருந்தாலும் வலி மறைந்து மீண்டும் வந்தாலும்.
  • தோள்கள், கழுத்து, தாடை, கைகள் ஆகியவற்றிற்கு வலி சென்றடைந்தால்.
  • மயக்கமாக உணர்தல் அல்லது மூச்சின் சுகுக்கத்தன்மை.
  • இது உங்கள் வயிற்றில் குமட்டலும் (அ) குமட்டலையும் சோர்வுணர்வையும்
  • நிரம்ப வியர்த்தல்.

உங்களுக்கு மார்படைப்பு இருந்தால் செய்ய வேண்டுவது என்ன ?

  • ஒரு ஆம்புலன்ஸ§க்காக 995யைக் கூப்பிடுக.
  • வண்டி ஒட்டாதீர்கள். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உங்களுடன் இருக்கும் ஒருவரை வண்டியை ஒட்டி அழைத்துச் செல்லும்படிச் செய்யுங்கள்.

மார்படைப்புக்கான சிகிச்சை என்ன ?

மார்படைப்பின் அளவிற்கேற்ப மருத்துவ மனையில் ஒருவாரம் தங்க வேண்டியிருக்கும்.

உங்களுக்குப்பின் வரும் சிகிச்சைகளுள் ஒன்றோ பலவோ செய்யப்படும்.

1. கட்டியைக் கரையவைக்கும் மருத்துவங்கள் :
உங்களுக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக, கட்டியைக் கரைய வைக்கும் (tலீக்ஷீஷீனீதீஷீறீஹ்றீவீநீ) மருத்துவம் செய்யப்படும். மாரடைப்பு நுணுகி ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்ட உடனேயே ஜிலீக்ஷீஷீனீதீஷீறீஹ்tவீநீதரப்பட வேண்டும்.

2. இருதய அங்கியோ பிளாஸ்டி (
Coronory Angioplasty):
அடைப்பின் அளவினைப் பார்வையிட இருதயத்துள் (
Coronory) ஒரு குழாய் செலுத்தப்படும். இருதய அங்கியோகிராமின் (Coronory Angioplasty) கண்டுபிடிப்புகளைப் பொறுத்து நீங்கள் ஸிங்கப்பூர் பெ £து மருத்தமனையில்(Singapore General Hospital)மேலும் சிக்ச்சை பெறுவதற்காகப் பரிந்துரைக்கப் படுவீர்கள். (மேலும் விவரங்களுக்கு All about Cardiac Catherisationன்னும் நூலைப் பார்க்க).


மருத்துவ மனையில் என்ன நிகழ்கிறது


உங்களுக்கான கவனிப்புத்திட்டத்தின் (
Care Plan) சுருக்கம் பின்வருமாறு.


நாள் 1

சிகிச்சை

  • நீங்கள் மருத்துவத் தீவிரக்கவனிப்புப்பகுதியில் (MICU) கண்கானிப்பு மற்றும் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவீர்கள்.
  • உங்கள் இருதயத்தின் துடிப்பு வீதம் மற்றும் சந்தத்தினை (Rhythm) கண்காணிக்க உங்கள் மார்பில் மின்முனைகள் வைக்கப்படும்.
  • மார்பு எக்ஸ்-கதிர் ஒன்றும்,எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்( ECG) ஒன்றும் இயற்றப்படும். இரத்தம் பகுப்பாய்வுக்காக எடுக்கப்படும்.
  • உங்கள் மூச்சிவிடுவதனை எளிதாக்குவதற்கான ஆக்சிஜன் தரப்படும். நீங்கள் மார்புவலியை உணர்ந்தால் செவிலிக்கு அறிவியுங்கள். உங்கள் வலியை நீக்க மருத்துவம் செய்யப்படும்.
  • நள்ளிரவிலிருந்து உணவு அல்லது குடிநீர் உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுவீர்கள்.

செயற்பாடு :
படுக்கையில் ஒய்வாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுவீர்கள்.
ஊட்டமூட்டுதல் :
உங்களுக்கு உணவு தரப்படும்.


நாள் 2

சிகிச்சை

  • காலையில் ஒரு எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்(ECG) எடுக்கப்படும்.
  • உங்கள் இரத்த கொலஸ்ட்ராலினை கணித்த பின்னர் காலைச் சிற்றுண்டி தரப்படும்.
  • இருதய மறுச்சீரமைப்புத்திட்டக் (CRP) குழுவின் உறுப்பினர்களான, ஒரு உடற்பயிற்சியால் சிகிச்சை அளிப்பவர் (Physiotherapist), ஒரு உணவு அறிவர் (Dietician) மற்றும் ஒரு உடல் மற்றும் மனத்தின் செயல்பாட்டால் நோய் தீர்ப்பவர் (Occupational Therapist) நீங்கள் சுகமாகவும் வலியில்லாமலும் இருக்கும்போது முறையாக அறிவுரை தருவர்.

செயற்பாடு :
படுக்கையில் ஒய்வாக இருக்கும்படி நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள்.

ஊட்ட மூட்டுதல் :
சிற்றுண்டி உங்களுக்குத் தரப்படும்.

நோயாளி பற்றிய செய்தி :
மாரடைப்பு, செயற்பாடு, மருந்து, அனுமதிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் சோதனைகள் செயல் முறைகள் ஆகியவைபற்றி நீங்கள் இருதய மறுசீரமைப்புத் திட்டக்குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தெரிந்துகொள்வீர்கள்.



நாள் 3

சிகிச்சை

  • ஒரு எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்(ECG) காலையில் எடுக்கப்படும்.
  • மருத்துவத் தீவிரக் கண்காணிப்புப் பகுதியில் (MICU) நீங்கள் கண்காணிக்கப்பட வேண்டியதில்லை என்றால் உங்களை பொது சிகிச்சை அறைக்கு மாற்றுவார்கள்.
  • ஒரு இருதயக் கண்காணிப்பானால் (Cardiac Monitor) உங்கள் இருதய துடிப்பு வீதம் மற்றும் சந்தம் கண்காணிக்கப்படும்.
  • மார்புவலியிருந்தால் செவிலிக்கு அறிவிக்கவும்.

செயற்பாடு :
நீங்கள் படுக்கையில் ஒய்வாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுவீர்கள்.

ஊட்டமூட்டல் :
ஒரு சிறிது உணவு உங்களுக்குத் தரப்படும்.

நோயாளி பற்றிய செய்தி :
மாரடைப்பு, செயற்பாடு, மருந்து, அனுமதிக்கப்படும் உணவுவகைகள் மற்றும் சோதனைகள் செயல்முறைகள் ஆகியவைபற்றி நீங்கள் இருதய மறு சீரமைப்புத் திட்டக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தெரிந்து கொள்வீர்கள்.



நாள் 4-6

சிகிச்சை

இருதயக் கண்காணிப்பான் நீக்கப்படும். மார்புவலியை நீங்கள் உணர்ந்தால் செவிலிக்கு அறிவித்தால், ஒரு எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்(ECG) எடுக்கலாம் மற்றும் வலிநீக்கும் மருத்துவம் செய்யப்படலாம்.
உங்கள் இருதயத்தின் செயற்பாடுகளை மதிப்பிட ஒரு தேர்வான எதிரெ £லிகார்டியோ க்ராம் செய்யப்படும்.
செயற்பாடு :
உங்களால் எழுந்திருக்க முடியும் (மலங்கழிக்கக்) குடலை அசைக்கும்போது கஷ்டப்பட வேண்டாம். அவ்வாறு செய்வதில் கஷ்டமிகுந்தால் செவிலிக்குச் சொல்லவும். மலத்தினை இளகச் செய்ய மருந்து தரப்படும்.

ஊட்ட மூட்டுதல் :
உங்கள் விருப்பப்படி உணவு உண்ணுவதற்கு முடியும்.

நோயாளி பற்றிய செய்தி :
உங்களுக்குத் தரப்படும் சிகிச்சை பற்றித் தொடர்ந்து விவரங்கள் தெரிவிக்கப்படும். நீங்கள் தெரிந்து கொள்வதற்காக, இருதயச் சீரமைப்புத்திட்டம் பற்றிய ஒரு கையேடு உங்களுக்குத் தரப்படும்.



நாள் 7

சிகிச்சை

உங்கள் உடல் நலமீட்பு நிறைவாக இருந்தால் இன்று நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பலாம்.
செயற்பாடு :
நீங்களாகவே நடப்பதற்கு முடியவேண்டும். நாளும் வாழ்க்கைச் செயற்பாடுகளை அதாவது குளிப்பது மற்றும் உண்பது ஆகியவற்றை மிகச்சிறு உதவியுடன் செய்யுங்கள்.

ஊட்டமூட்டல் :
உங்கள் விருப்பப்படி உங்களால் உணவு உண்ண முடியும்

நோயாளி பற்றிய செய்தி :
எழுத்தாலான செய்தியைத் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல அலுவலர் தருவார். உங்களுக்கு புறநோயாளி சந்திக்கும் முன்னேற்பாடு தரப்படும்.

மாரடைப்பிற்குப் பின்னர் என்ன செய்வது ?
உங்களுடய ஒழுங்கான வாழ்க்கைமுறையை மெல்லமெல்ல மீண்டும் தொடங்குவதற்கு உங்கள் மருத்தவர், ஒரு இருதய மறுச்சீரமைப்புத் திட்டம், உணவுக்கட்டுப்பாடு, மற்றும் மருந்து உட்கொள்ளுதல் ஆகியவற்றிற்குப் பரிந்துரை செய்வார்.

இருதய மறுச்சீரமைப்புத் திட்டம் :
இந்தத் திட்டம் பின் வருவனற்றிற்கு உதவும் வகையில் சில ஒழுங்கான உடற்பயிற்சிகளைக் கற்பிக்கிறது.

a.உங்களுடைய தாங்குகின்ற அளவினை அதிகமாக்குதல்.
b.தாழ்ந்த இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொழுப்புப்பொருள்.
c.இறுக்கத்தை விடுவிப்பது.
d.உங்கள் எடையைக் கட்டுப்படுத்த.
e, இருதயத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தல்.

நீங்கள் ஒரு உள்ளக நோயாளி அல்லது புறநோயாளி இருதய மறுச்சீரமைப்புத் திட்டம் வாயிலாகப் பயிற்சி செய்யலாம். பயிற்சிகளின்போது உடல் நலம் பேணும் தொழில் வல்லுநர்கள் உங்களைக் கண்காணிப்பார். புறநோயாளி மறுச்சீரமைப்புத் திட்டத்தை நீங்கள் முடித்து விட்டபோதும் நீங்கள் வீட்டில் பயிற்சிகளைத் தொடர வேண்டும். எடுத்துக்காட்டு : நடத்தல். பாதுகாப்புடன் நீங்கள் செய்யக்கூடிய பயிற்சிகளை நீங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

உணவுப்பட்டியல் சீர்திருத்தங்கள் :
நீங்கள், பின்னர் குறிப்பிடப்பட்டவை போன்ற உயர்ந்த கொழுப்புப்பொருள் கொண்ட உணவையும், தெவிட்டிய கொழுப்புகள் கொண்ட உணவையும் தவிர்க்க வேண்டும். முழுமையான பாலாலான பொருட்கள், முட்டைகள், கறி, தேங்காய் எண்ணெய் மற்றும் பனை எண்ணெய்.

இவற்றிற்குப் பதிலாக சனோலா எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். உங்கள் உணவினை வேகவையுங்கள், சுடுங்கள், அல்லது ஆவியூட்டுங்கள்.

உங்கள் மருத்துவங்களை மேற்கொள்ளுங்கள் :

அ. இரத்த அழுத்தத்தைக் குறையுங்கள்.

ஆ. மார்பு வலியைத் தணியுங்கள்.

இ. ஒரு சீரான இதயத்துடிப்பினைக் காப்பாத்துங்கள்.

ஈ. இருதயத்தின் இரத்தக் குழாய்கள் வழியாக இரத்தம் பாய்வதை உயர்த்துங்கள்.

உ. உங்கள் கொலஸ்ட்ராலைக் குறையுங்கள்.

மருத்தவர் குறிப்பிட்ட வண்ணம் மருத்துவ உணவு, உடற்பயிற்சி ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும்.

(நீங்கள் புகைபிடிப்பவராயிருந்தால்) புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் உதவியால் புகை பிடிப்பதை நிறுத்துங்கள். அல்லது ஒரு புகைபிடிப்பு நிறுத்தல் மருத்துவச் சாலையில் சேரவும்.

நெகிழ விடுதற்கு (ஸிமீறீணீஜ்) க் கற்றுக் கொள்ளுங்கள்.
பின்வரும் திறன்களைப் பயன்படுத்தி நெகிழவிடுதலைக் கற்றுக்கொள்ளலாம்.
அ. ஆழமாக மூச்சு விடுதல் :
உங்கள் வயிற்றின் மீது கைகளுடன் உட்காருங்கள் அல்லது நில்லுங்கள். உங்கள் மூக்கு வழியாக மெதுவாக உள்ளாக மூச்சுவிட்டு உங்கள் வயிறு விரிவதை உணருங்கள். உங்கள் சுருங்கச் செய்யப்பட்ட உதடுகள் மூலம் மெல்ல மூச்சை வெளிவிடுங்கள். பலதடவை திரும்பத் திரும்பச் செய்யுங்கள்.

ஆ. தசை நெகிழவிடல் :
உங்களுடைய பாதங்களிலிருந்து உங்களுடைய முகம் வரை செயலிட்டு ஒரு வேளையில் ஒரு தசைக்குழுவினை இறுக்கச் செய்து பின்னர் நெகிழவிடுங்கள். உங்கள் தசை இலேசாவதை நீங்கள் பார்க்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


1. நான் நடக்கலாமா ? படி ஏறலாமா ?

உங்களின் மாரடைப்பிற்குப் பின்னர், நீங்கள் தேவையான அளவு ஒய்விலிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவீர்கள். மாரடைப்பிற்குப் பின்னர் மூன்றாவது வாரத்தில் நீங்கள் தட்டையான நிலத்தில் ஒழுங்கான நடத்தலைத் தொடங்கலாம். நான்காவது வாரத்தில் மாடிப்படி ஏறுதல், மலை ஏறி நடத்தல் ஆகியவற்றைத் தொடங்கலாம். ஆறு எட்டு வாரங்களில் ஒழுங்கனை செயற்பாடுகளை மீண்டும் செய்யத் தொடங்கலாம். நடக்கும் போது மார்புவலி மற்றும் மூச்சுமுட்டல் ஆகியவற்றை உணர்ந்தால் மெதுவாக நடந்து நடப்பதை நிறுத்துங்கள். உங்கள் அடையாளங்களை மருத்தவரிடம் கூறுங்கள்.


2. வேலைக்கு எப்போது திரும்பலாம் ?

இது உங்கள் வேலையின் தன்மையைப் பொறுத்தது. உங்கள் வேலை கடின உடலுழைப்பில்லாதது என்றால் சில வாரங்களில் மீண்டும் வேலைக்குச் செல்லலாம். உடலுழைப்புடன் கூடிய வேலையாய் இருந்தால் சுமார் மூன்று மாதங்களில் வேலையைத் திரும்ப மேற்கொள்ளலாம்.


3. நான் ஒழுங்கான செயற்பாடுகளுக்கும் விளையாட்டுகளுக்கு எப்போது திரும்பலாம் ?

எந்தச் சிக்கலும் இல்லாதிருந்தால் மூன்று மாதங்களில் ஒழுங்கான செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளலாம்.


4. மீண்டும் நான் எப்போது ஊர்தியை ஒட்டலாம் ?

மாரடைப்பிற்குப் பின்னர் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில் உங்களால் ஊர்தியை ஒட்ட இயலும்.

தொடக்கத்தில் யாராவது ஒருவர் உம்முடன் வருவது நல்லது.


5. நான் பால்வினையில் ஈடுபடலாமா ?
பெரும்பாலானோர், மாரடைப்பிற்குப் பின்னர் நான்கிலிருந்து ஆறு வாரங்களில் பால்வினையில் (sமீஜ்) ஈடுபடத்தொடங்குகின்றனர். நீங்கள் மார்பு வலியை உணர்ந்தால் உடன் நிறுத்தி ஒய்வு கொள்ளுதல் வேண்டும்.