பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 17:24
அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்.
அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக்கூடாது என்றும் பெற்றோருக்கு
நன்மை செய்ய வேண்டுமென்றும். உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்.
அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவரோ உம்மிடத்தில் முதுமை அடைந்து
விட்டால், அவர்களை ச்சீ என்று (கூட) சொல்ல வேண்டாம் மேலும் அவ்விருவரையும்
( உம்மிடமிருந்து ) விரட்ட வேண்டாம். மேலும் அவ்விருவரிடமும் கனிவான,
கன்னியமான பேச்சையே பேசுவீராக! இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும்
இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும் என் இறைவனே! நான்
சிரு பிள்ளையாக இருந்த போது என்னை(ப் பரிவோடு) இவ்விருவரும் வளர்த்தது போல்,
நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக! என்று கூறிப்பிரார்த்திப்பீராக!
அல்குர்ஆன்: 17.23,24
தாயின் கருவறை ரகசியம் என்ன வென்று தெரியுமா ?........
நேற்றைய தினம் தைக்கால் பள்ளி இமாம் அஹமது மீரான் ஹஜரத்
அவர்கள் KEO சார்பாக நடைபெற்ற
நேரிய இஸ்லாமிய வழியில் பெண்கள் என்ற தலைப்பில்
பெண்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
சுவன பூங்கா வை கடந்து செல்ல நாடினால் ... எனும்
தலைப்பில் ஆற்றிய உரையை பார்த்தோம் ..மேலும் ஹஜரத் பெருந்தகை
தனது உரையில் தாயின் கருவறை ரகசியத்தை பற்றி பேசிய பேச்சை கேட்ட
போது மேற்குருபிட்டுள்ள இறைமறை வசனம் எனது யாபகத்திற்கு வந்தது ...
அதனால் தான் இதனை எழுதிவிட்டு ஹஜரத் உரைக்கு நுழைகிறேன்....
பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 17:24
வல்ல அல்லாஹ் தனது வான்மறையில் எத்தனை பொருள்பட பெற்றோரை
பேண வேண்டும் என குருபிடுகிறான் ....ஆனால் இன்று நடை முறையில் என்ன
நடக்கிறது ? கணவனை இழந்த தாயை கவனிக்க திராணி இல்லாத மனிதர்கள்
சமூகத்தில்
இன்று பகட்டாக வலம்வருவதை யும் தனது விளம்பரத்திற்காக வியாபாரத்திற்காக
பள்ளிவாசல்களுக்கு மின்விசிறிகளை விளம்பரபடுத்தி அன்பளிப்பு
செய்வதையும்,மீலாது
விழாக்களில் மேடைகளை ஆக்கிரமித்து மின்விளக்குகளால் தங்களால்தான் சீரும்
சிறப்புமாக சீரத் மாநாடுகளை நடத்திட முடியும் என மார்தட்டி கொள்வதையும் தன்னை சீராட்டி பாலுட்டி வளர்த்த அன்னையை புறக்கணித்து விட்டு இப்படியெல்லாம் நவீன மனிதர்கள் நடைபோட்டு கொண்டிருப்பதை நம்மால் பார்க்கத்தான் முடிகிறது .......
ஆனால் ஹஜரத் அவர்களின் பேருரையில் ..குழந்தை பருவத்தை குருப்பிடும் போது.......
குழந்தை பருவத்தை வரலாற்று ஆசிரியர்கள் பகுத்து பார்க்கும் போது
பல்வேறு கால அளவை குருபிடுவார்கள் .குழந்தை நல்லது எது கேட்டது எது
என பிரித்து பார்க்கும் தருணம் வரை குழந்தை பருவம் தான் என சொல்லுவார்கள் ..
குழந்தை பருவம் என்பது மிக மிக முக்கிய பருவம் .இரண்டாவது தாய்மை பருவம் இது
தான் மிக முக்கியமான பருவம் .குழந்தைகளின் தேவைகள் அறிந்து தாய் அவளை
ஆளாக்கும் பருவம் .மூன்றாவது பருவம் வயோதிக பருவம் ..
இரண்டாவது பருவத்தில் பிள்ளைகள் தாயை சார்ந்தும்
மூன்றாவது பருவத்தில் தாய் பிள்ளைகளை சார்ந்து இருக்கும் பருவமாகும் .இந்த
மூன்றுவிதம்மான பருவத்தையும் நமது மார்க்கம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறது....
இதிலே குழந்தை பருவத்தை இஸ்லாம் மிக முக்கிய தருணமாக சொல்லி
காட்டுகிறது .நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு கட்டிடத்திற்கு எப்படி அஸ்திவாரம் முக்கியமோ அதுபோல குழந்தைகளை நன்கு கவனித்து நாம் பேனுதளோடு ஆளாக்கும் பருவம் குழந்தை பருவம் .ஒரு குழந்தை ஆறு மாதத்தில் இருந்து பேச துவங்குகிறது ...அந்த காலகட்டத்தில்
நாம் நமது பழக்க வழக்கங்களை சீராக அமைத்து கொண்டால் கூர்ந்து நம்மை கவனிக்கும் குழந்தை அதனை எளிதாக பின்பற்றும் .குழந்தைக்கும் குழந்தையின் தாயிக்கும் அல்லாஹ் தொப்புள் கொடி
உறவை வைத்திருக்கிறான் ..இந்த தொப்புள் கொடி உறவு என்பது உணர்வு சார்ந்தது ! உதாரணமாக குழந்தை தொட்டியிலே உறங்கும் போது திடிரென அழுகிறது என்று சொன்னால் அடுப்படியிலே நிற்கும் தாய் ஓடோடி வந்து குழந்தையை வாரி அணைத்து கொள்கிறாள் .நெஞ்சோடு தாய் அணைத்தவுடன் குழந்தை அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் ..
இந்த ஸ்பரிசம் அதற்க்கு அனுபவ பட்டதாக இருக்கிறது ..வேறு வேலையாள் வந்து தூக்கினால் குழந்தை அழுகையை நிறுத்துவதில்லை ..காரணம் என்ன மனோதத்துவ நிபுணர்கள் சொல்லுகிறார்கள் ..
ஒரு தாயின் கருவறையில் நான்காவது மாதத்தில் குழந்தைக்கு உயிர் கொடுக்க படுகிறது ..நபிகள் பெருமானார் ஸல் அவர்களும் இதை தான் சொல்லுகிறார்கள் ..நான்காவது மாதத்தில் இருந்து அந்த குழந்தை தாயின் கருவறையில் அவளின் இதய துடிப்பை கேட்க கேட்க அதனை பழக்க படுத்தி கொள்கிறது .அந்த தாயின் உடல் அமைப்பு அந்த குழந்தைக்கு ஏற்று கொள்ள கூடியதாக
அமைந்து விடுகிறது .இந்த நான்கு மாதத்தில் துவங்கும் துடிப்பு கருப்ப அறையில் வெளிவரும் வரை கேட்க பழகி விட்டதினால் வெளியிலே அழும் குழந்தையை தாய் நெஞ்சோடு ஆற அணைக்கும் போது ஏற்கெனெவே கேட்ட துடிப்பு என்பதினால் அழுகையை நிறுத்தி விடுகிறது .வல்ல அல்லாஹ் ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு பாலத்தை உணர்வு பாலத்தை இப்படி
தெளிவாக படம் பிடித்து காட்டுகிறான் .
எனவே தான் தாய்மை பருவத்தில் குழந்தைக்கு ஒரு தாய் எதை போதிகிறாலோ அதை அப்படியே எடுத்து கொள்கிறது .எனவே தான் குழந்தை பருவம் மிக முக்கிய பருவம் என்று குருபிடுகிறோம் .
அதனை தொடர்ந்து இரண்ட்டவது கட்டம் தாய்மை பருவம் ...இந்த பருவத்தில் தனது பிள்ளைகளுக்காக தாய் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து கொள்ளும் காலமாகும் .மூன்றாவது வயோதிக பருவம் வருங்கால சந்ததிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக நம்மை முறைபடுத்தி கொள்ளும் பருவமாகும் .
இப்படி இந்த மூன்று பருவத்திலும் எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டுமென நமது
மார்க்கம் சிறப்பாகவே சொல்லித்தருகிறது .
இன்றைக்கு பெண்களின் நிலைகளை பார்கின்றோம் ..பெருமானார் ஸல் அவர்கள்
பெண்களை பற்றி அற்புதமாக விவரிதுள்ளர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் அரபா பெருவெளியில் நிகழ்த்திய உரை ..உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உரை .அந்த உரையில் மிக முக்கியமாக பெருமானார் ஸல் அவர்கள் வலியுறுத்தி சொன்னது பெண்கள் விசயத்தில் அவர்களது உரிமைகளை நீங்கள் பேணி கொள்ளுங்கள் என்பதாகும் . அப்படியானால் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்து பேசியுள்ளார்கள்
என்பதை புரிந்து கொள்ளலாம் .
மதினாவில் சஹாபாக்கள் முன்னிலையில் ஒருமுறை உரையாற்றும் போது இரண்டு பலகீனமானவர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன் ...அவர்களது உரிமைகளை நீங்கள் பாது காத்து கொள்ளுங்கள் என்று உங்களை எச்சரிக்கை செய்கிறேன் ...
சஹாபாக்கள் கேட்டார்கள் யாரசூலுல்லாஹ் ...யார் அவர்கள் .. பெருமானார் ஸல் அவர்கள் சொன்னார்கள் ...ஒன்று எத்திமானவர்கள் (அனாதைகள் ) மற்றொண்டு பெண்கள் ..
அனாதைகள் பலகீனமானவர்கள் தான் அதன் காரணம் உங்களுக்கு புரியும் ..பெற்றோர் இல்லாதவர்கள் ..
ஆனால் பெண்கள் ஏன் பலகீனமானவர்களாக குருபிட்டர்கள் என்பதை நாம் ஆழ்ந்து
சிந்திக்க வேண்டும் .
அத்தகைய பெண்களுக்கு சைத்தானின் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்து விட கூடியவர்கள் ..ஆகவேதான் நாம் கண்ணும் கருத்துமாய் பெண்களை பலகீனமானவர்களாய் கருதி ஆண் மக்கள்
விட்டு கொடுத்து நீதமுடம் நடந்து கொள்ள வேண்டும் .................இவாறு ஹஜரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .
KEO நிர்வாகிகளுக்கு மிக முக்கிய 2 கோரிக்கைகளை முன்வைப்பேன்...ஜமாத்தார்
முன்னிலையில் ...
அது என்ன முக்கிய கோரிக்கை ?? நாளை பார்ப்போமே .....
ABDUL ALEEM
0 comments:
கருத்துரையிடுக