KEO நிர்வாகிகளுக்கு 2 கோரிக்கைகளை...

அன்புடையீர்
 
அஸ்ஸலாமு அழைக்கும்
 
நேற்று நமதூரில் தைக்கால் பள்ளி இமாம் அஹமது மீரான் ஹஜரத் அவர்கள் KEO சார்பாக நடைபெற்ற
 நேரிய இஸ்லாமிய வழியில் பெண்கள் என்ற தலைப்பில் பெண்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் ஆற்றிய உரையை பார்த்தோம் ..மேலும் ஹஜரத் பெருந்தகை அவர்கள்
 
கூத்தாநல்லூர் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் KEO நிர்வாகிகளுக்கு 2 கோரிக்கைகளை முன்வைப்பதாக குருப்பிட்டர்கள் ....
 
# தனி நபர் ரீதியாக 
 
நமதூரில் விவாகரத்துக்கள் அதிகமாகி அசாதாரண சூழ்நிலை ஏற்படுவதை கட்டுபடுத்த
 
திருமணமாகும் மணமக்களுக்கு தனி தனியாக கவுன்சிலிங்  நடத்தபடவேண்டும் .திருமணம் என்றால் என்ன வென்று தெரிவதுக்குள்ளாகவே பெண் பிள்ளைகள் மணபெண்ணாக்க படுவதினால் 
 மலேசியா,சிங்கப்பூர், தமிழ் நாட்டில் சில பகுதிகளில் நடைபெறுவது போல் ஒரு தேதி குறிப்பிட்டு அந்த
 சீசனில் திருமணம் நடைபெறும் மணமக்களை அழைத்து இஸ்லாமிய குடும்பம், திருமணம், மகர்,வலிமா,கணவன் கடமை மற்றும் உரிமை ,மனைவி கடமை மற்றும் உரிமை குழந்தை வளர்ப்பு பிரச்சனைகளின் பொது செயல்படும் யுக்தி ஆகியன தலைப்புகளில் பயிற்று விக்க பட வேண்டும்.
 
 
# சமூகம் ரீதியாக
 
பெரியவர்களையும் முதியவர்களையும் சீர்படுதுவதைவிட வருங்கால சந்ததியினரான  மாணவ பருவத்தினரை பக்குவ படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் . அதற்காக நமதூரில் மிக ஏழ்மையான குடும்பத்திலுள்ள நன்றாக படிக்கும் ஆண் பெண் பிள்ளைகளை தத்தெடுத்து  அவர்களை உயர்கல்வி மற்றும் பட்டய படிப்பு வரை படிக்க வைத்து நமதூர் ஜமாத்தார்கள் மேற்பார்வையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்த்து பணியாற்ற வைபதின் மூலம் கட்டுகோப்பான ஒழுக்கமான ஒரு சமுதாயத்தை அஸ்திவாரத்திலிருந்தே எழுப்ப முடியும் .
 
 
இவ்வாறு மௌலவி ஹாபிஸ் அல்ஹாஜ் M .S .அஹமது மீரான் பைஜி இமாம் தைக்கால் பள்ளி
 
அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் .
 
Thanks to Abdul Aleem