சுவன பூங்கா வை கடந்து செல்ல நாடினால் ...
அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும்
நமதூரில் இன்று 5/5/2012 KEO சார்பாக நடைபெற்ற
நேரிய இஸ்லாமிய வழியில் பெண்கள் என்ற தலைப்பில்
பெண்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
இன்று காலை ஜாமியா தொடக்கப்பள்ளியின் அரங்கில்
தலைவர் N.M.A சகாபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .
முன்னதாக சகோதரி
ராபியத்துல் பஜரியா இறைமறை வசனங்களை ஓதினார்கள் .
தலைமை உரை
ஆற்றிய ஜமாஅத் தலைவர் அவர்கள் பெண்களுக்கு இந்த பயிற்சி ஒரு சிறந்த
முயற்சி ,சகோதரிகள் இல்லத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இவர்கள்
பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும் என்றார்கள் .குடும்ப
பெண்கள்
இன்றைக்கு பொழுது போக்கு சாதனங்களில் தங்களது பொன்னான நேரத்தை
வீணடிப்பதை
தவிர்க்க வேண்டும் .அப்படியே தொலைகாட்சிகளில் அமர்ந்திருக்கும் போது சில
இடம்களில்
கலாசார சீரழிவை தரும் ஆடல் பாடல் நிகழ்சிகள் குழந்தைகளோடு அமர்ந்து
பார்க்கும் அவல
நிலைகள் சமூகத்தில் நிகழ்கிறது .
இவற்றையெல்லாம் முற்றிலும் தவிர்த்து மார்க்க நிகழ்சிகளை
மட்டும் காணும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள் .
சிறப்புரையாற்றிய கூத்தாநல்லூர் தைக்காப்பள்ளி இமாம்
அஹமது மீரான் ஹஜரத்
அவர்கள் தனது பேருரையில்.......
பொதுவாகவே கோடைகாலத்தில் எல்லோரும் ஊட்டி ,கொடைக்கானல் என
முன்கூட்டியே
திட்டம் போட்டு செல்வதை காணமுடியும் .
ஆனால் கோடைகால வாஸ்தசலம் செல்வதைவிட
இப்படி வருவது தான் சிறந்த வாஸ்தசலம் ஆகும் .
பெருமானார் ஸல் அவர்கள் சொல்லுவார்கள் ...
சுவன பூங்காவை நீங்கள் கடந்து செல்ல நாடினால் அங்கு சென்று
கொள்ளுங்கள் ...என்பார்கள் ..
சஹாபா பெருமக்கள் கேட்பார்கள் ..யாரசூலுல்லாஹ் ...
வமாகிய ரியாளுல் ஜன்னாஹ்?
உலகில் நாங்கள் எங்கே சுவன பூங்காவை பார்ப்பது ?
என கேட்பார்கள் .
அதற்கு பெருமானார் ஸல் அவர்கள் அல்லாஹ்வை ஞாபகப்படுதுமிடம் அந்த
குழுமம் என்றார்கள் .
இதற்கு சஹாபாக்கள் விளக்கம் சொல்லும் போது அல்லாஹ்வை திக்ரு
செய்யுமிடம் என்றும் அல்லாஹ்வின் மஸ்ஜீத்கள்
என்றும் அல்லாஹ்வின் செய்திகளை சொல்லுமிடம் என்றும்
விளக்கமளிப்பார்கள் .
அப்படி பார்க்கும்போது அல்லாஹ்வின்
செய்திகளை சொல்லும் மார்க்க பேரறிவுகளை எடுத்து இயம்பும் இத்தகைய
இடம் ...நபிகள் பெருமான் சொன்ன அறிவு சாலையான ஜாமியா அரங்கு இன்று
முதல் இந்த பயிற்சி முடியும் வரை சுவன பூங்கா தான் .
எனவே இந்த விடுமுறையில்
எல்லாவற்றையும் தவிர்த்து விட்டு சகோதரிகளே இங்கே வந்துள்ளிர்களே...
உண்மையான சுவன பூங்காவை நீங்கள் பெற்றிட
வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும் .
இஸ்லாமிய வழியில் பெண்கள் என்ற தலைப்பில் இங்கு பயிற்சி நடைபெற
இருக்கிறது .
இஸ்லாமிய வழியில் வந்து விட்டாலே நேரிய வழியில் வந்தவர்கள் தான் .
அதிலும் குறிப்பாக
பெண்கள் என்று இதனை வரையறுத்து உள்ளார்கள் .
பெண்கள் சமூகத்தின் முக்கிய அங்கம் என்பதால்
அதிலும் குறிபாக நமதூர் பெண்கள் பிள்ளைகளை தனது கண்காணிப்பிலேயே
வைத்திருப்பவர்கள் ...
ஏன் என்றால் நமதூர் சகோதர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது பிள்ளைகளை
வளர்த்து ஆளாக்கும்
பொறுப்பு தாய்மார்களையே சாருகிறது ...
எப்படி பார்த்தாலும் சமூகத்தின் அங்கமாக பெண்கள் இருக்கிறார்கள்
மார்க்கத்தை முழுமையாக படித்த பெண் குடும்பத்தில் இருப்பார்னேயானால் அந்த
குடும்பத்திற்கு எந்தவித
பிரச்சனையுமில்லை ...
குடும்பத்தின் பிள்ளைகளின் கல்வி என்பது அந்த குடும்பத்தின் மார்க்க கல்வியை
பொறுத்தே அமைகிறது !
பொதுவாக பெண்களின் பருவத்தை நமது மார்க்கம் மூன்று விதமாக பிரித்து
பார்க்கிறது .ஆண்களுக்கும்
அப்படி மூன்று பருவம் இருந்தாலும் பெண்களுக்கு முதலாவதாக குழந்தை பருவம் ,
இரண்டாவதாக தாய்மை பருவம்,
மூன்றாவதாக முதுமை பருவம் என பிரித்து பார்க்கிறது .இந்த மூன்று
பருவத்தையும் ஆணும் பெண்ணும் தாண்டிதான்
செல்ல வேண்டும் .இதிலே மூன்று பருவத்தையும் மார்க்கம் பிரித்து பார்த்து
பெண்களுக்கு குழந்தை பருவத்தை (திஸ்லியத்) பலரும்
பல்வேறு கால அளவை சொல்லுவார்கள் .
உம்மியத் தாய்மை பருவம் ஒரு பெண் தன குழந்தையை பரிபாலனம் செய்யும் பருவம் ...
பிள்ளைகள் தாயை சார்ந்து இருக்கும் இருக்கும் பருவம் ..மூன்றாவது பருவம் குஹூளியத்
தாய் பிள்ளைகளை சார்ந்து இருக்கும் பருவம் ...
இந்த மூன்று பருவத்தில் திஸ்லியத் குழந்தை
பருவம் மிக மிக முக்கியமான பருவமாகும் .
ஒவ்வரு குழந்தையின் அஸ்திவாரமே குழந்தை பருவம்தான்!
ஏன்னென்று சொன்னால் ஒரு கட்டடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல
foundation சிறப்பானதாக
இருப்பதுபோல் குழந்தை பருவத்தை நாம் குழந்தைகளுக்கு மார்க்க பேரறிவை ஆரம்ப முதலே
புகுத்த வேண்டும் என்றார்கள்.
தாயின் கருவறை ரகசியம் என்ன வென்று தெரியுமா ?........
KEO நிர்வாகிகளுக்கு மிக முக்கிய 2 கோரிக்கைகளை முன்வைப்பேன்...ஜமாத்தார்
முன்னிலையில் ...
என ஹஜரத் அவர்கள் குறிபிட்டர்கள்..அது என்ன தாயின் கருவறை ரகசியம்?
அது என்ன முக்கிய கோரிக்கை ?? நாளை பார்ப்போமே ..
NOTE: இந்த பயிற்சியில் சகோதரிகள் 73 பேர் பங்கெடுத்து கொண்டார்கள் ...
ANBUDAN
ABDUL ALEEM
0 comments:
கருத்துரையிடுக