அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ..
நேற்று 5/1/2013 அன்று திருச்சியில் நடைபெற்ற தமிழக அரசின்
பள்ளிகல்வி துறை பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக பள்ளிகல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் சிவபதி அவர்கள் திருவாரூர் மாவட்ட சிறந்த அரசு உதவிபெறும் பள்ளிக்கான விருதை மன்ப உல் உலா மேனிலை பள்ளி தாளாளர் சகோதரர் T.M. தமிஜுதீன் அவர்களிடம் வழங்கினார்கள் .இணைப்பில் புகைப்படம் உள்ளது . அருகில் உயர்திரு பள்ளிகல்வித்துறை செயலாளர் திருமதி சபீதா IAS அவர்களும் திருச்சி
மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும் ,திருச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் பள்ளிகல்வி துறை திட்டக்குழு செயலாளர் சகோதரர் ஜலாலுதீன் IAS அவர்களும் நிற்கிறார்கள் . இந்த இனிய விழாவில் மன்ப உல் உலா மேனிலை பள்ளி தலைமையாசிரியர் T. உதயகுமார் அவர்களும்
மன்ப உல் உலா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அவர்களும் மூத்த ஆசிரியர்கள் இருவரும் ,பிரதிபலிப்பு ஆசிரியர் அப்துல் அலீம் அவர்களும் கலந்துகொண்டனர் .

ABDUL ALEEM