இலக்கியச் செம்மல், தமிழ் மாமணி
கம்பம் முகம்மது அலி அண்ணன் அவர்கள் வஃபாத்து.
இலக்கியச் செம்மல், தமிழ் மாமணி கம்பம் முகம்மது அலி அண்ணன் அவர்கள் இன்று 15 - 2 - 2013 வெள்ளிக்கிழமை காலை மதுரையில் வஃபாத்தானார்கள் (இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அவர்களது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 16 - 2 - 2013 காலை கம்பத்தில் நடைபெறும் என்று உத்தம பாளையம் பேராசிரியர் அப்துஸ்ஸமத் அவர்கள் தகவல் தந்துள்ளார்கள்.
தமிழ் இலக்கியவாதிகளுக்கும் -தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் மிகச் சிறந்த நண்பராகவும், தலைசிறந்த தமிழ் நூல்களை தன் சொந்தச் செலவில் ஆயிரக்கணக்கில் சேகரித்து பெரிய நூலகத்தை வைத்துள்ள வருமான அன்னாரின் இழப்பு சமுதாயத்தின் மிகப் பெரிய இழப்பாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளைப் பொறுத்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக என அனைவரும் பிராத்திப்போமாக, ஆமீன்!
- டாக்டர் ஹிமானா சையத்
0 comments:
கருத்துரையிடுக