அனைவருக்கும் KEO வின் இனிய ரமலான் முபாரக்

அன்புடையீர், 

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

 

வருகின்ற புனித மிக்க ரமலான் மாதம் நம் அனைவருக்கும் நன்மை பயக்க கூடியதாக்கி, அதன் மூலம் வல்ல நாயனின் கிருபை நம் மீது உண்டாக வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாகவும். ஆமீன்.

 

அனைவருக்கும் KEO வின் இனிய ரமலான் முபாரக்.

 

KEO வின் சேவைக்கு உறுதுணையாக இருந்து வரும் அமீரகம் வாழ் கூத்தாநல்லூர் சகோதர / சகோதரிகள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினையும், துஆ வையும் உரித்தாக்கி கொள்கின்றோம்.

 

மேலும் மற்ற நாடுகளிலிருந்து ஆதரவு வழங்கியும், ஊரில் KEO விற்காக களப்பணி ஆற்றி வரும் எங்களது பிரதிநிதிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினையும், துஆ வையும் உரித்தாக்கி கொள்கின்றோம்.

 

வழமை போல், தங்களது நன்கொடைகளை KEO வின் ஆக்கப்பணிகளுக்கு வழங்கி நமதூரின் வளர்ச்சிக்காகவும், இயலா நிலையில் உள்ள நமதூர் சகோதர/சகோதரிகள் நல் வாழ்விற்காகவும் உதவிட பணிவுடன் கோருகின்றோம்.

 

இதுபோல் பிற நாட்டில் உள்ள நமது சகோதரர்கள் KEO மூலம் உதவ விரும்பினால் அவர்களும் தங்களது நன்கொடைகளை எங்களுக்கு அனுப்பி உதவலாம்.

 

வல்ல ரஹ்மான் நமக்கும், நமதூருக்கும் என்றென்றும் நல்லருள் புரிவானாகவும். ஆமீன்.

 

தங்களின்,

 

நிர்வாகிகள்

KEO.