பெரியபள்ளி முன்னால் தலைவர் மரியாதைக்குரிய 
ஹாஜி சிலிங்கி ஹாஜா மைதீன( வயது 85)அவர்களது நல்லடக்கம் 
இன்று இரவு 7 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நடைபெறும் என அறிவிக்கபடுகிறது .

மறைந்த முதுபெரும் தலைவர்ஹாஜி சிலிங்கி ஹாஜா மைதீன் அவர்களது மறைவு செய்தி 
அறிந்து பல்வேறு கூத்தாநல்லூர் சகோதரர்கள் இன்று அதிகாலையிலிருந்து அவர்களது 
ஹமீதியா தெரு இல்லத்திற்கு வந்தவண்ணமுள்ளனர் ...

இன்று மதியம் அன்னாரது ஜனாஸா சென்னையிலிருந்து இங்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்க படுகிறது .
மறைந்த தலைவர் ஹாஜி சிலிங்கி ஹாஜா மைதீன் அவர்களது சமுதாய பங்களிப்பு 
கூத்தாநல்லூர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ..

பல்வேறு பொது அமைப்புகளில் தன்னை இணைத்து கொண்டு அரும்பணியாற்றியவர் .
பெரியபள்ளி தலைவர் ,சின்னபள்ளி துணை தலைவர் ,முஸ்லிம் லீக் ,ஹயாதுன் ராதிபத்துள் 
முகமதியா சபை , சன்மார்க்க தொண்டர் சபை,  போன்றவற்றில் பணியாற்றியவர்கள் ஆவார்கள்.
 மிராசுதார் சங்கம் மற்றும் ஜஷ்ன மீலாத் சொசைட்டி ஆகியவற்றின் தலைவராக இருந்த போது அந்தந்த இயக்கங்களின் நலனுகாக அரும்பாடுபட்டவர்களாவார்கள் .

ஜஷ்ன மீலாத் சொசைட்டி தலைவராக இவர்கள் இருந்த பொது தான் சென்னையில் இந்த நிறுவனத்திற்கு சிறந்த வருமானத்தை தரும் சொந்த கட்டிடம் வாங்க பட்டது .

இறைவன் தனக்கு அளித்த செல்வத்தை அவனது பாதையிலேயே செலவு செய்து அவனது 
பொருத்தத்தை பெறுவதில் மிகுந்த அக்கறை செலுத்திய  முதுபெரும் தலைவர்ஹாஜி சிலிங்கி ஹாஜா மைதீன் அவர்களது   மக்பிரதிர்க்கு நாம் எல்லோரும் துவா செய்வோம் .

இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!


Thanks to Br. ABDUL ALEEM