27/10/2013 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் மிகவும் சிறப்பாக அல்லாஹ்வின் கிருபையை கொண்டு இனிதே நடைபெற்று முடிந்தது. மக்கள் பயன் பெறவேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கத்திற்காக நடைபெற்ற முகாமில் 450க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்தனர்.
மொத்தத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 450 நபர்கள் மட்டும் தாமதம் இல்லாமலும் சரியான நேரத்தில் வந்து பயன் அடைந்தனர். மீதம் உள்ளவர்கள் அனைவரும் தாமதமாகவும் வெளியூரில் உள்ளவர்களாகவும் இருத்தால் அவர்கள் வர இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கோவை ஜெம் மருத்துவர்கள் 10 நபர்களும் மற்றும் 25 கோவை ஜெம் மருத்துவ குழுவினர்களும் வருகைதந்தார்கள். Dr. சி.பழனி வேலு M.S. தலைமை மருத்துவர் கோவை ஜெம் மருத்துவமனை அவர்களும் வருகை தந்து நல்லதொரு ஆலோசனை மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு சரியான மருத்துவ குறிப்புகளை வழங்கினார்கள். மேலும் சிறப்பு சலுகைகளை அறிவிப்பு செய்து சென்றுள்ளார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை நமதூர் பெரியபள்ளி , கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன்(KEO) மற்றும் அல் அமான் இளைஞர் இயக்கம் பொறுப்பேற்று செவ்வன நடத்தி முடித்தார்கள்.
இதற்காக அரும் பாடுபட்ட Dr. J .B. அஷ்ரப் அலி அவர்களுக்கும், அனைத்து ஊர் ஜமாஅதினர்கள், குறிப்பாக பொதக்குடி ஜமாஅதினர்களுக்கும், அனைத்து சபைகள், சங்கங்கள், பற்பல இளைஞர் இயக்க நண்பர்களுக்கும் மற்றும் மருத்துவ குழுவினர்கள் தங்க இடம் கொடுத்த J .A . ஜலாலுதீன் (புருனை) குடும்பத்தினர்களுக்கும், குழுவினர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்த ஷேய்குமீறாலம் மர்ஹும் செய்யது முகம்மது குடும்பத்தினர்களுக்கும் மற்றும் முகாமிற்கு முன்பதிவு செய்து கொடுத்த ஆஃபியா P .K .M . மாலிக் அண்ணன் அவர்களுக்கும் முகாம் நடைபெற இடம் தந்த பெரியபள்ளி நிர்வாகதினர்களுக்கும், யார் யாரெல்லாம் தெரிந்தும் தெரியாமலும் பாடுபட்டார்களோ அனைவருக்கும் KEO மற்றும் அல் அமான் இளைஞர் இயக்க சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முகாம் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களின் பார்வைக்காக பதிகிறோம்.
https://plus.google.com/photos/112371855198655699377/albums/5939736449577470209?authkey=CNzVjeXa9MPkmwE

0 comments:
கருத்துரையிடுக