Fwd: வேண்டுகோள் ...

அன்பார்ந்த தாங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

நீண்ட நாட்களாக நமதூர் ஜாமியா பெண்கள் பாட சாலையில் Desk மற்றும் Bench வசதி இல்லாமல் நமதூர் பெண் பிள்ளைகள் தரையில் அமர்ந்து படித்து வருவதை அறிந்த நாம் அதற்கான முதற்கட்ட நடவடிகையாக முதலில் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு Desk மற்றும் Bench வசதியினை எற்படுத்தி கொடுப்பது என KEO வின் நிர்வாக கூட்டத்தில் முடிவு செய்து 15 Sets, அதாவது வகுப்பு ஒன்றுக்கு set வீதம் மூன்று வகுப்பறைகளுக்கு செய்து கொடுப்பது என முடிவு செய்து அல்லாஹவின் கிருபையால் அவை வழங்கப்பட்டு விட்டது என்பதை பொது மக்களாகிய உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். இத்துடன் அமைத்து கொடுக்கப்பட்ட Bench &Desk புகைப்படம் இணைத்துள்ளோம்.

இதற்கான மொத்த செலவு ரூபாய் 65,000/= ஆகும். இதுவரை நபர்கள் செட்டிற்கு sponsor செய்துள்ளார்கள்.அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். மற்ற (மீதம் உள்ள 11) செட்டிற்கும் விரும்புபவர்கள் sponsor செய்துகல்விச்சாலைக்கு உதவி செய்த நன்மையை அடையலாம்.

மேலும் மற்ற மற்ற வகுப்பறைகளுக்கு Bench மற்றும் Desk வசதி செய்வதற்கு ஈகை உள்ளம் கொண்ட நமதூர் நண்பர்கள் & பெரியவர்கள் உதவுவீர்கள் என்ற நோக்கத்தில் இந்த செய்தியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு set வாங்க உதவினாலும் பள்ளி கூடத்தின் தேவையை முழுமை படுத்தி விடலாம் என்ற நோக்கத்தில் தங்களிடம் இந்த கோரிக்கையினை வைக்கின்றோம்.

ஒரு Set -ன் (Steel bench & Steel desk)  விலை ரூபாய். 4,500/- மட்டுமே.


மேலும் அதிகம் விபரம் அறிய விரும்புவோம் எங்களிடம் போனில் அல்லது ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 தொடர்பு: +971 55 393 3248 Alwani Akbar  / +971 50 4969 409 Nottan Thahir Ali )

என்றும் சமுதாய சேவையில்...

கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைஷேசன் (KEO) - துபாய்.