அன்புள்ளம் கொண்ட கூத்தாநல்லூர் ஜமாஅத்தினற்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமதூர் பெரிய பள்ளி வாயில் மூலம் நடந்து வந்த பாதுகாப்பு சபை சேவை தற்போது தற்காலியமாக நிறுத்தப்பட்டு விட்டது என்பதை வேதனையுடன் தெரிவித்துகொள்கின்றோம்.
இச்சேவை துவங்குவதற்கு முன் நமதூரில் நடைபெற்று வந்த திருட்டுக்கள், அனாச்சாரங்கள் மற்றும் இடையூறுகள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே. இச்சேவை துவங்கிய பின் இவை அனைத்தும் முற்றிலுமாக கட்டுபடுத்தப்பட்டு,இரவில் நமதூர் நல்ல பாதுகாப்பை பெற்றிருந்தது என்பதை நாம் கூறி தெரியவேண்டிய அவசியமில்லை.
கடந்த ஒன்றரை வருடங்களாக நமதூரில் இரவு அமளிகள் எதுவுமில்லாமல்மிகவும் அமைதியுடன் இருந்து வந்தது.
பாதுகாப்பு சேவைக்காக வீடு ஒன்றிக்கு மாதம் ரூபாய் 40/= வீதம் கட்டணம்நிர்ணயித்து பெரிய பள்ளியில் நடைபெற்ற பொது கூட்டத்திலும், மற்றும் துண்டுபிரசுரம் மூலமும் பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து இச்சேவைதுவங்கப்பட்டது.
ஆனால் நாம் இந்த சிறு தொகையை கூட கொடுத்து உதவாமல், இச்சேவையைநிறுத்த காரணமானவர்கள் ஆகி விட்டோம். ஊர் பாதுகாப்பு எவ்வளவு அவசியம்என்று தெரிந்தும், வீண் ஆடம்பரதிற்கெல்லாம் எவ்வளவோ செலவு செய்யும் நாம், இந்த சிறு தொகையை கூட தர மறுத்து, வசூல் செய்தவர்களை ஏளனம் பேசி, இறுதியில் இச்சேவையை நிறுத்தி விட்டோம்.
பாதுகாப்பு சேவையை துவங்க KEO மிகவும் சிரத்தை எடுத்து பெரிய பள்ளிநிர்வாகத்தை பல முறை தொடர்பு கொண்டு மிகவும் வற்புறுத்தி, ஆரம்பசெலவினங்களுக்காக ரூபாய் 50,000/= நன்கொடை வழங்கியும், ரூபாய் 50,000/=கடனாக வழங்கியும் இச்சேவை செயல் பட துணை நின்றது.
மேலும், சென்ற வருடம் UAE யில் உள்ளவர்களிடம் (160 வீட்டிற்கு) வருடகட்டணம் முழுவதுமாக வசூலித்து கொடுத்து பெரிய பள்ளி நிர்வாகத்திற்குஉதவினோம்.
இவ்வருடமும் சிலரிடம் வசூலித்து வந்த நிலையில், பொருளாதார சிக்கலினால் இச்சேவையை நிறுத்தப் போவதாக கூறி பெரிய பள்ளி நிர்வாகம் இச்சேவையை தற்காலியமாக நிறுத்தி விட்டது.
இதற்கு பெரிய பள்ளி நிர்வாகம் கூறிய காரணங்கள்:
நமதூரில் எவ்வளவு முயன்றும் போதிய வசூல் வராத காரணத்தால் பெரிய பள்ளிநிதியிலிருந்து இதுவரை சுமார் ரூபாய் 2.5 லட்சம் வரை இச்சேவைக்காகஎடுக்கப்பட்டுள்ளது. மேலும், KEO விடம் இருந்து பெற்ற கடன் ரூபாய் 50,000/=திரும்ப செலுத்த வேண்டும். இந்த பொருளாதார நெருக்கடியை வெளி நாடுகளில்உள்ள நமதூர்வாசிகளிடமிருந்து பெற்று நிவர்த்தி செய்ய முயற்சித்ததில், எந்தபயனும் ஏற்படவில்லை.
மேலும், மேலும் பொருளாதார சிக்கலில் மாட்டாமல் தவிர்த்து கொள்ளவும், நமதூர் மக்களும் இதில் அதிக அக்கறை எடுத்து கொள்ளாத காரணத்தினாலும் இச்சேவையை தற்காலியமாக நிறுத்தியதாக கூறுகின்றனர்.
மேலும், இச்சேவை குறித்து UAE யில் உள்ள KEO வினர் மட்டுமே அதிக அக்கறை காட்டுகின்றீர்கள், மற்ற நாடுகளில் உள்ள நமதூர் வாசிகள் யாரும் பொருட்படுத்துவதாக தெரிய வில்லை என்றும் தெரிவித்தார்கள்.
ஏற்கனவே, இச்சேவை சில காலம் செயல்படுவதும், பின்னர் தடை படுவதும்,பின்னர் சச்சரவுகள் கிளம்பும் போது மீண்டும் ஏற்படுத்துவதுமாக இருந்து வருகின்றது.
நமதூருக்கு நாம் எண்ணினால் எவ்வளவோ நல்ல திட்டங்கள், சேவைகள் செயல்படுத்த இயலும். ஆனால், நமது ஒற்றுமையின்மை,ஒத்துழைப்புயின்மை, அக்கரையின்மை போன்றவற்றால் எந்த திட்டங்களும் செயல் படுத்த இயலாமல் போகின்றது.
குறிப்பாக இரவு நேர அவசர மருத்துவ வசதி, ஊர் பதுகாப்பு சபை ஆகியவை அதி முக்கிய தேவைகள் ஆகும்.
KEO மூலம் இரவு நேர மருத்துவரை சில காலம் நியமித்து செயல் படுத்தினோம். அது தடைபட்ட போது, மீண்டும் ஒரு மருத்துவரை அணுகி இரவு நேரத்தில் பணி செய்ய வேண்டி, அதற்காக மாத சம்பளம் வழங்கி வந்தோம். அதுவும் தற்போது தடைபட்டு உள்ளது.
KEO மீண்டும் இச்சேவையை செயல் படுத்த முயற்சித்து வருகின்றது. ஆனால் மற்ற எவரிடமிருந்தும் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் கால தாமதம் ஏற்படுகிறது. இன்ஷா அல்லாஹ், நாம் அனைவரும் ஒத்துழைத்தால் இதனை வெகு எளிதாக செயல் படுத்த இயலும்.
வருந்தத்தக்க செயல் என்னவெனில், நாம் எது, எதுக்கோ தேவையில்லாமல் விவாதமும், கருத்து பரிமாற்றங்களும் செய்கின்றோம். ஆனால், பொது சேவைக்கு யாரும் அதிக அக்கரை எடுத்து கொள்வது இல்லை.
நம்மை பற்றி நாமே பெருமை பேசுவதும் அல்லது அடுத்தவர்களை எள்ளி நகையாடுவதும் என்றே காலம் கடத்துகின்றோம்.
நமது ஆணவம் (ego), பொறாமை ஆகியவற்றை தவிர்த்து அல்லாஹுவின் அருளையும், நமது ஊரின் நன்மையையும் கருத்தில் கொண்டு ஒன்று பட்டு செயல் பட நாம் அனைவரும் பாடு பட வேண்டுகின்றோம்.
பணிவான வேண்டுகோள்:
பாதுகாப்பு சபை மீண்டும் செயல் பட நாம் அனைவரும் பெரிய பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குவோமாக.
நமது வீட்டிற்கான கட்டணத்தை நாமே சென்று செலுத்தி அவர்களது வேலை பளுவை குறைபோமாக.
வெளி நாடுகளில் உள்ள நமதூர் அமைப்புகள் (Associations) தாளார மனத்துடன் அவ்விடம் உள்ள நமதூர் வாசிகளிடமிருந்து வசூல் செய்து பெரிய பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகின்றோம்.
வசதி படைத்த மற்றும் அதிக பொருளீட்டும் நமதூர் வாசிகள் தாளார மனத்துடன் இச்சேவைக்கு வாரி வழங்க வேண்டுகின்றோம்.
உயிர் காக்கும், பிணி நீக்கும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்த உலகின் அனைத்து பகுதியிலும் உள்ள நமதூர் வாசிகள் கரம் கொடுத்து உதவ வேண்டிகின்றோம்.
இச்சேவைகள் மீண்டும் செயல்படுவது நம் கையிலேயே உள்ளது என்பதனை உணர்ந்து அனைவரும் இச்சேவைகள் தொடர உதவிகள் செய்ய வேண்டுகின்றோம்.
இங்ஙனம்,
P. A. ரஃபீக் முஹம்மது
00971-50-5283106
மற்றும்
KEO அங்கத்தினர்கள்.
0 comments:
கருத்துரையிடுக